Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸ் எப்படி இருக்கும்...அதை நீங்க பார்க்கனுமா...இதோ செய்திக்குள்ளே..!!

கொரோனா வைரஸ், இந்த வார்த்தையை கேட்டாலே உலகத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காத வார்த்தையாக அமைந்துள்ளது.இதுவரைக்கும் கொரோனா வைரஸ் அது எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்தது அல்ல;முதன் முதலாக இந்திய வைரஸால்ஜி ஆய்வு நிறுவனம் இதுதான் கொரோனா என அதன் முகத்தை வெளியிட்டிருக்கிறது.
 

This is how the corona virus looks ...
Author
India, First Published Mar 28, 2020, 8:27 AM IST

TBalamurukan

கொரோனா வைரஸ், இந்த வார்த்தையை கேட்டாலே உலகத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காத வார்த்தையாக அமைந்துள்ளது.இதுவரைக்கும் கொரோனா வைரஸ் அது எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்தது அல்ல;முதன் முதலாக இந்திய வைரஸால்ஜி ஆய்வு நிறுவனம் இதுதான் கொரோனா என அதன் முகத்தை வெளியிட்டிருக்கிறது.

This is how the corona virus looks ...

கொரோனா வைரஸின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்படப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் இப்படங்கள் எடுக்கப்பட்டு,வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் அந்த நோய்த்தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

 வுஹானிலிருந்து கடந்த ஜனவரியில் இந்தியா திரும்பிய கேரள மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்தான் கொரோனா வைரஸை இந்தியாவிற்கு அழைத்துவந்த முதல் நபர். இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் கொரோனா வைரஸின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 'சார்ஸ்-சிஓவி-2' எனப்படும் அந்த வைரஸின் படங்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.இந்த வைரஸானது, கடந்த 2012-ஆம் ஆண்டில் பரவிய மொ்ஸ்-சிஓவி வைரஸ், கடந்த 2002-இல் பரவிய சார்ஸ்-சிஓவி வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

This is how the corona virus looks ...

இதுதொடா்பாக தேசிய வைரலாஜி நிறுவனத்தின் துணை இயக்குநா் அதானு பாசு பேசும் போது, "கேரளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தினோம். அதில் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசைமுறையானது, வுஹானில் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசைமுறையை 99.98 சதவீதம் ஒத்திருந்தது. இந்த வைரஸ்கள், சராசரியாக 70-80 நானோமீட்டா் அளவில் வட்ட வடிவம் கொண்டவை" என்கிறார்.

This is how the corona virus looks ...

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைமை இயக்குநா் நிர்மல் கே.கங்குலி, "கரோனா வைரஸானது, கிரீடம் போன்ற வெளித்தோற்றத்தை கொண்டது. கரோனா என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று அா்த்தமாகும். தற்போது எடுக்கப்பட்டுள்ள படங்கள், 'சார்ஸ்-சிஓவி-2' வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்வில் முக்கிய பங்காற்றும். கொவைட்-19 பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் இது உதவிகரமாக இருக்கும்,என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios