Horoscope: கிரகங்களின் சக்ரவர்த்தியாக கருதப்படும் சூரியனின் அருளும், அவரின் இடமும் நமது வாழ்க்கைக்கு முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
கிரகங்களின் சக்ரவர்த்தியாக கருதப்படும் சூரியனின் அருளும், அவரின் இடமும் நமது வாழ்க்கைக்கு முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி மீன ராசியில் இருந்து செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு மாறினார். சூரிய பகவான் அங்கு மே 14-ம் தேதி வரை இருப்பார்..
பணம், கல்வி, ஆரோக்கியத்தை வழங்கும் இந்த சூரிய பெயர்ச்சி இந்த மே 14-ம் தேதி வரை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இது யார் யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசிக் காரர்களுக்கு இந்தநாளில் செல்வம் பெருகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் பிறக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் உற்சாகமாக இருக்கும். சூரிய பகவானின் அருளால் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி, உயர்கல்வி ,தொழிலில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த நேரம் நல்ல நேரமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தியில் ஒற்றுமை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்:
இந்த நாள் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் மரியாதையையும் தரும். பணியிடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பணியில் இடம் மாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். சேமிப்பதில் வெற்றி உண்டாகும். எதிலும், துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
