Horoscope: பகுத்தறிவு, கல்வி, எழுத்து ஆகியவற்றில் உறுதுணையாக இருக்க கூடிய புதன் கிரகம் ஏப்ரல் 25-ம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது.
பகுத்தறிவு, கல்வி, எழுத்து ஆகியவற்றில் உறுதுணையாக இருக்க கூடிய புதன் கிரகம் ஏப்ரல் 25-ம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது.
புதன் பெயர்ச்சி 2022:
புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன். இதுவரை மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி இடம் பெயர்த்துள்ளார். இதையடுத்து, புதன் கிரகம் மீண்டும் ஏப்ரல் 25-ம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது. புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதன் காரணமாக சில ராசியினருக்கு அற்புத பலன் கிடைக்க போகிறது.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பல சிறப்பான நன்மைகளைத் கொடுக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். தொழில், வாழ்கை,கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு இதுசிறப்பாக இருக்கும். எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாகஇருக்கும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி உயர்வு பெறலாம். வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.. வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி தொழில், வியாபாரத்தில் நல்ல பலனை அள்ளி தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
