the things a mother should not talk with her daughter
ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்பது உலகம் அறிந்ததே. அதிலும் ஒரு பெண், அவருக்கும் தான் பெற்ற பிள்ளைக்கும் இடையே உள்ள ஒரு அன்பு பிணைப்பை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.
தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பந்தம் யாராலும் விளக்கவும் முடியாது. ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகள் மீது என்றும் அதிக அன்புடன் இருப்பார். அதுவும் பெண் பிள்ளையென்றால் உயிரையே கொடுத்து பாதுகாத்து வருபவள் தான் ஒரு தாய்.
நல்ல நண்பர்கள் போல் பழகுபவர்கள் தான் ஒரு தாயும் மகளும். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை என்றும் தன் மகளிடம் பேசவே கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தாய் தன் மகளிடம் எதையெல்லாம் பேசக்கூடாது என்பதை பார்க்கலாம்
உங்கள் மகள் உங்களை விட சற்று அழகில் குறைந்தவளாக இருந்தாலும், எந்த நேரத்திலும் விளையாட்டாக கூட அதை பற்றி பேசக்கூடாது.
படிப்பு சம்பந்தமாக மகளை குறைத்து பேசக்கூடாது. வரும் நாளில் அவள் எந்த துறையில் சிறந்து விளங்கப்போறார் என்பதை நீங்கள் முடிவு செய்து விட முடியாது.
எல்லா சூழ்நிலையிலும் ஒரு பெண் தியாகம் செய்து வாழ்பவளாகத்தான் இருக்க வேண்டும் என பழமொழி சொல்லி, அவளின் உரிமையை கூட பறிக்கும் விதத்தில் பேசக்கூடாது
மகளின் திருமணத்தின் போது, இந்த மாப்பிள்ளை விட்டால் உனக்கு வேறு மாப்பிள்ளை கிடைக்க மாட்டார் என கூறி உங்கள் மகளின் தரத்தை நீங்களே குறைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் மகளிற்கு எப்பொழுது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ அதுவரை காத்திருந்தால் நல்லது
உங்கள் மகளை திட்டும் போது, மற்றவர்களின் முன் திட்ட வேண்டாம். அது சிறு குழந்தையாக இருந்தாலும் சரி பெரிய பெண்ணாக இருந்தாலும் சரி.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒரு தாய் தன் மகளிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை தெளிவுபடுத்தியுள்ளது
