மொத்தம் 1500 கோடி அள்ளி கொடுத்த கடவுள் TATA..!  500 கோடியோடு கூடுதல் நிதி..! 

கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாடா அறக்கட்டளை சார்பில் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்டளை தலைவர் ரத்தன் டாடா அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கூடுதலாக 1000 கோடி வழங்க முன்வந்துள்ளனர் டாடா சன்ஸ். இதன் மூலம் 1500 கோடி வழங்கி உள்ளது டாடா சன்ஸ்  

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா வைரசால் 20 கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களும் நிதி உதவி அளிக்கலாம் என பிரதமர்  மோடியும் வேண்டுகோள்  விடுத்தது உள்ளார். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாடா அறக்கட்டளை சார்பில் 500 கோடி ரூபாய் நிதியுதவியுடன் கூடுதலாக 1000 கோடி வழங்க உள்ளது. மேலும் உயிர் காக்கும் கவசமாக வெண்டிலேட்டர் தயாரிப்பிலும் இறங்க உள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்து உள்ளது 

இதுதொடர்பாக, ரத்தன் டாடா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக உதவி உள்ளது. தற்போது கொரோனா பெரும் சவாலாக உள்ளது. கொரோனா வைரஸ் என்பது மனித இனமாக நாம் எதிர்கொள்ளும் கடினமான சவால்களில் ஒன்று. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தெரிவித்து உள்ளார்.