10 பொருத்தங்களில் எந்தெந்த பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்?
திருமணத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைய வேண்டுமா? ஜோதிடத்தின்படி, தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம் போன்ற பல பொருத்தங்கள் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜோதிடம் பல நூற்றாண்டுகளாக நமது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது, காதல், தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்காக பலர் தங்கள் ஜாதகத்தை பார்த்த பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். அந்த வகையில் திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் முக்கியமானதாக கருதபடுகிறது.
மணமகனும் மணமகளும் நிம்மதியான, மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக ஜாதகம் பார்க்கப்படுகிறது. மணமகள் மற்றும் மணமகனின் திருமண பொருத்தத்தை ஜாதக பொருத்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜாதக பொருத்தம் என்பது காலங்காலமாக பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். இன்னும் சொல்லப்போனால் திருமணத்தின் முதல் படியே இதுதான். திருமணத்தை பொறுத்த வரை முக்கியமாக பார்க்க வேண்டிய பொருத்தங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தினப்பொருத்தம் : தினப்பொருத்தம் இருந்தால் தான் மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
கணப்பொருத்தம் : மணமகன், மணமகல் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும் கணப்பொருத்தம் உள்ளது.
மகேந்திர பொருத்தம் :
குழந்தை பாக்கியத்தை குறிக்கக்கூடிய பொருத்தம் தான் மகேந்திர பொருத்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமணத்திற்கு முக்கியமான பொருத்தமாக இது கருதப்படுகிறது.
பாம்பு மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?
ஸ்தீரி தர்க்க பொருத்தம் :
பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணினால், 13-க்கும் மேல் இருந்தால் ஸ்தீர் தர்க்க பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.
யோனிப் பொருத்தம் :
திருமண வாழ்க்கையில் கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பொருத்தமே யோனி பொருத்தம் என்று குறிக்கப்படுகிறது. இந்த பொருத்தம் சரியாக இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.
ராசி அதிபதி பொருத்தம் :
ஆணின் ராசி அதிபதியும், பெண்ணின் ராசி அதிபதியும் நட்பு அல்லது சமநிலை என்ற அளவில் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு
வசியப் பொருத்தம் :
திருமணத்திற்கு பின் ஆண், பெண் இருவரும் எந்தளவுக்கு ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்கின்றனர் என்பதை இந்த வசியப்போருத்தம் குறிக்கும்.
கெட்ட சக்திகளிடம் இருந்து உங்க வீட்டை பாதுகாக்க 5 வழிகள்!!
ரஜ்ஜு பொருத்தம் :
ஆண் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது. திருமணத்திற்கு இது முக்கியமான பொருத்தமாகும்.
வேதை பொருத்தம் :
வேதை என்றால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பொருள். எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திருமணத்தை முடிவு செய்ய வேண்டும்.
திருமணத்தை முடிவு செய்வதற்கு முன்பு 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் சரியாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். தினப் பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதை பொருத்தம் ஆகிய சரியாக இருக்கின்றனவா என்பதை பார்த்து திருமணம் செய்வது நல்லது என்று ஜோதிடம் கூறுகிறது.