கெட்ட சக்திகளிடம் இருந்து உங்க வீட்டை பாதுகாக்க 5 வழிகள்!!
Remove Negative Energy At Home : உங்கள் வீட்டை தீய சக்தியிடமிருந்து பாதுகாக்க, உங்களுக்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சில சமயங்களில் வீட்டில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள், வியாதிகள் கடன் பிரச்சனை போன்றவை வரத் தொடங்கும். இதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அதற்கு முக்கிய காரணம் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பது தான்.
ஆம், ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால், அந்த வீட்டில் மோசமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும்.
இலவங்கப்பட்டை : இலவங்கப்பட்டை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். ஆனால், இதை வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுகிறது தெரியுமா? இதற்கு இலவங்கப்பட்டை தூளை வீட்டில் மூலைகளில் தூவினால், எதிர்மறை ஆற்றல்கள் வராமல் தடுக்கும் மற்றும் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
ரோஸ்மேரி : ரோஸ்மிரி தலைமுடிக்கு மட்டுமல்ல வீட்டிற்கும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். பழங்காலத்தில் இருந்தே இது சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ரோஸ்மேரி இலைகளை கதவுகளுக்கு அருகில் வைத்தால், வீட்டை தய எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி ரோஸ்மிரி செடியை வீட்டின் நுழைவாயில் அல்லது பால்கனியில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது.
மணி : வீட்டில் மணிகளை தொங்க விட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். மணிகளில் வரும் ஒலி, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை உடைத்து நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.
இதையும் படிங்க: நிலம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லையா..? உடனே இந்த 2 பரிகாரங்கள் செய்ங்க.. வீடு கட்டுவது உறுதி!
கற்பூரம் எரிப்பது : கற்பூரம் இந்து சடங்குகளில் ஒரு முக்கிய பகுதியாகும். கற்பூரம் எரிப்பது வீட்டை எதிர்மறை ஆற்றலில் இருந்து சுத்தப்படுத்தி, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும். கற்பூரத்திலிருந்து வரும் வாசனை மற்றும் புகையானது வீட்டில் எல்லா இடங்களிலும் பரவினால் எதிர்மறை ஆற்றல் வீட்டை விட்டு ஓடிவிடும்.
இதையும் படிங்க: Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!
வெள்ளை மெழுகுவர்த்தி : வெள்ளை மெழுகுவர்த்தி ஆன்மீகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்ற வெள்ளை மெழுகுவர்த்தியை எதிர்ப்பது நன்மை பயக்கும். இதற்கு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு தடித்த வெள்ளை மெழுகுவர்த்தியை வைத்து, தீய எண்ணம் உள்ளவர்கள் வீட்டிற்குள் வந்து சென்றவுடன் அவர்களுடன் தீய சக்தியும் செல்ல மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.