அடுத்த ஒரு இளைஞருக்கு கொரோனா அறிகுறி..! சிவகங்கை மருத்துவமனையில் அனுமதி...! 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மித்ராவயலை சேர்ந்தவர் கார்த்திக்  என்பவர். இவருக்கு வயது 22. பெங்களூருவில் கூலி வேலை செய்து வரும் கார்த்திக் தொடர் காய்ச்சல், மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு தற்போது ஓய்வு எடுக்க சொந்த ஊரான சிவகங்கைக்கு திரும்பி உள்ளார் 

காய்ச்சல், இருமல் தொடர்ந்ததால் இன்று காலை புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரானோ தொற்று இருக்கலாம் என கூறி சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்

கொரோனா அறிகுறி தென்பட்டதால் சிறப்பு வாகனம் மூலம் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும்  காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பல நபர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தாலும், இதுவரை 3 பேருக்கு மட்டுமே கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.