Asianet News TamilAsianet News Tamil

கட்டப்பா, ஊட்டிக்கு டூர போடப்பா!

Summer Holidays Trip with Family
summer holidays-trip-with-family
Author
First Published May 4, 2017, 11:37 AM IST


கொடநாடில் கொலை _ கொள்ளை, ஓ.பி.எஸ். அணியும் _ எடப்பாடி அணியும் சேருமா சேராதா!, தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா?... என்று ஆயிரத்தெட்டு கவலைகள் இருந்தாலும் கூட நம்ம புள்ளைங்களுக்கு விட்டாச்சுடா லீவு! இதை என்ஜாய் பண்ணலேன்னா மனசுக்கு வந்துடும்டா நோவு! அதனால எலேய் கட்டப்பா சட்டுபுட்டுன்னு டூர போடப்பா என்று டைமிங்காக ரைமிங் குரல் கொடுக்கும் குடும்பங்களுக்காக செம ச்வீட் நியூஸ் இது...

summer holidays-trip-with-family

யெஸ்! நீலகிரியில் கோடை விழா ஆரம்பிச்சாச்சுங்கோ! இந்த மே மாதம் 6 மற்றும் 7_ம் தேதி கோத்தகிரியில ஆரம்பவிழாவோட சேர்த்து காய்கறி ஷோ, 7 முதல் 31 வரைக்கும் ஊட்டி சேரிங்கிராஸ்ல போட்டோ எக்ஸ்பிஷன், 10 முதல் 31 வரைக்கும் கார்டன் ரோட்டில் உள்ள பழங்குடிகள் கலாசார  மையத்துல கலை நிகழ்ச்சிகள், 13 மற்றும் 14 தேதிகளில் ஊட்டி ரோஸ் கார்டன்ல ரோசா பூ ஷோ...

summer holidays-trip-with-family

 12 முதல் 14 வரை கூடலூர் தாமஸ் ஹையர் செகண்டரி பள்ளி மைதானத்துல ஸ்பைஸ் ஷோ, 16ம் தேதி ஊட்டி போட் ஹவுஸ்ல படகு பந்தயம், 19_ம் தேதி முதல் 21_ம் தேதி வரை ஊட்டி பொட்டானிகல் கார்டன்ல மலர் கண்காட்சி, 27 மற்றும் 28 தேதிகள்ள குன்னூர் சிம்ஸ் பார்க்ல பழ கண்ட்காட்சி.

இதை மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் ஃபீல்ல்ல்ல்ல்ல்ல் பண்ணுவீங்க!
கட்டப்பா இன்னுமா நீ டிராவல்ஸுக்கு போன் போடல?

Follow Us:
Download App:
  • android
  • ios