Summer aloe vera: வெயில் காலம் துவங்கிவிட்டாலே, முகத்தில், வெடிப்பு, பருக்கள் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிருக்கும். 

வெயில் காலம் துவங்கிவிட்டாலே, பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிருக்கும். முகத்தில், வெடிப்பு, பருக்கள் போன்றவை தோன்றும். இவற்றில் இருந்து தீர்வு காண கற்றாழை சருமங்களை பராமரிப்பது மட்டுமின்றி, அழகு, ஆரோக்கியம் போன்ற பலவற்றிற்கு நல்ல தீர்வாக அமைவதால் கற்றாழையால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதில் உள்ள மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகளவில் இருப்பதன் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கற்றாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:

கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின்A, B1, B2 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கற்றாழையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் உள்ளதால் இதனை தோல் அழற்சி மற்றும் முடி பராமரிப்பு போன்றவற்றிற்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது.

செரிமான பிரச்சனைக்குத் தீர்வு:

வெயில் காலத்தில் பல்வேறு செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக வாயு, அஜீரணம், வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கக் கூடும். உடலில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு கற்றாழை மிகச்சிறந்த தீர்வாக உள்ளது. எனவே நம்முடைய உணவு முறைகளில் இதனைப் பயன்படுத்தும்போது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தின் தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவியாக உள்ளது.

சருமத்தை பராமரிப்பதற்கு:

இதோடு வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது போன்ற பலவற்றிற்கு தீர்வாக கற்றாழை அமைகிறது. இதனை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊறவைத்த பின் கழுவினால் முகம் பளபளக்கும். வெயில் காலத்தில் இவை உங்கள் சருமத்தை பராமரிக்கிறது. 

கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட, சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம். 

ஆலுவேரா ஜெல் தயாரிக்கும் முறை: 

1. கற்றாழை கிளைகளில் உள்ளே இருக்கும் ஜெல்லை ஸ்பூனால் தனியாக எடுக்கவும். இதனை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

2. ஒரு சிறிய கப்பில் ஜெலட்டின் பவுடரை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொண்டு, அதில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும். இதனை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதன் மீது ஜெலட்டின் பவுடர் கலவையை வைத்து 5 நிமிடத்திற்கு நல்ல கட்டியாக ஜெல் பதத்திற்கு வந்துவிடும்.

3. பிறகு, ஜெலட்டின் கலவை ஆறிய உடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள ஆலோவோராவை கலந்தால் ஆலுவேரா ஜெல் ரெடி. இவை உங்களை குளு குளுவென வைத்திருக்கும். 

மேலும் படிக்க...Today astrology: ஏப்ரல் 3 வரை எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய 5 ராசிகள்...இன்றைய ராசி பலன்..!