இல்லைத்தரசிகள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய சில பயனுள்ள வீட்டு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

இல்லத்தரசிகளே நீங்கள் ஹார்டாக வேலை பார்ப்பதற்கு பதிலாக ஸ்மார்டாக வேலை செய்தால் அலுப்பு தெரியவே தெரியாது. இதற்காகவே உங்கலது அன்றாட வாழ்க்கையில் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில பயனுள்ள வீட்டு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

1. வீட்டில் துருப்பிடித்த பூட்டுகள் இருந்தால் அதற்கு மேல் எண்ணெய் தடவினால் அழுக்குகள் படிந்து மேலும் இறுக்கமாகிவிடும் எனவே எண்ணெய்க்கு பதிலாக பவுடரை தூவி திறந்தால் சுலபமாக இருக்கும்.

2. சாக்பீஸ்களை வாங்கி பொடியாக்கி அதை வீட்டில் இருக்கும் ட்யூப் தடவினால் பல்லிகள் அதன் வாசனைக்கு வராது.

3. நீங்கள் தரமான எவர்சில்வர் பாத்திரம் வாங்க விரும்பினால் கடைக்கு செல்லும் முன் ஒரு காந்தத்தை கொண்டு செல்லுங்கள். நீங்கள் வாங்கும் பாத்திரத்தை காந்தத்துண்டு வைக்கவும். அது ஓட்டிக் கொண்டல் அந்த பாத்திரம் மட்டமானது என்று அர்த்தம்.

4. மெழுகுவர்த்தியை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தினால் நீண்ட நேரம் திரி எரியும் மற்றும் சீக்கிரத்திலும் உருகாது.

5. வெள்ளி ஆபரணங்கள் கருத்துப் போவதை தடுக்க அதனுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வையுங்கள்.

6. வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் எறும்பு புற்றில் பெருங்காய தூளை தூவி விடுங்க.ள் எறும்புகள் வீட்டிலிருந்து ஓடிவிடும் அல்லது செத்து மடியும்.

7. நீங்கள் பிரஷர் குக்கரை பயன்படுத்தவில்லை அதை மூடி வைக்க வேண்டாம்.

8. பொருட்களின் மேல் கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தை பொடியாக்கி அதன் மீது தூவி விடுங்கள்.

9. நீங்கள் எப்போதாவது உபயோகிக்கும் ஷூ வில் நாப்தலின் உருண்டையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

10. பிளாஸ்டிக் பக்கெட்டில் ஓட்டை விழுந்துவிட்டால் பழைய டூத் பிரஷை தீயில் காட்டி அதிலிருந்து வரும் திரவத்தை பக்கெட்டில் இருக்கும் ஓட்டையின் மீது தடவினால் ஓட்டை அடைபட்டு விடும்.

11. ஆடைகளில் எண்ணெய் கறை அல்லது கிரீஸ் கறை பட்டு விட்டால் அவற்றை நீக்க துவைக்கும் போது யூகலிப்டஸ் எண்ணெயின் சில துளிகளை கரை மீது தடவி சிறிது நேரம் கழித்து எப்போதும் போல சோப்பு போட்டு துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.

12. வீட்டில் புதிதாக பெயிண்ட் அடித்தால் அதன் வாசனை பிடிக்கவில்லை என்றால் அதை போக்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்தால் பெயிண்ட் வாடை உடனே நீங்கிவிடும்.

13. கத்திரிக்கோல் மங்கி போனால் ஒரு அலுமினிய ஃபாயிலி கத்திரிக்கோலால் வெட்டி பிறகு கழுவினால் கூர்மையாகிவிடும்.

14. துணிகளை துவைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்து துவைத்தால் ஆடைகள் நிறம் மாறாமலும் மிருதுவாகவும் அப்படியே இருக்கும்.

15. பூந்தொட்டிகளில் எறும்புகள் வராமல் இருக்க எலுமிச்சை தோள்களை அதில் போட்டு வைக்கலாம்.

16. காய்கறிகள் நறுக்கிய போர்டை சுத்தம் செய்யும் முன் எலுமிச்சையில் உப்பை தூவி அதைக்கொண்டு போர்டில் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு எப்போதும் போல சுத்தம் செய்தால் கரைகள் அகன்று விடும்.

17. வீட்டிலிருந்து எலிகளை விரட்டியடிக்க ஒரு காட்டன் பந்தில் பெப்பர்மின்ட் எண்ணெயை நினைத்து அதை எலிகள் நடமாடும் இடத்தில் வைத்தால் உடனே ஓடிவிடும்.

18. கோலப் பொடியில் சிறிதளவு உப்பை கலந்தால் கோலம் ஷைனிங்காக தோன்றும்.

19. துருப்பிடித்த சட்டியை சில நிமிடங்களில் சுத்தம் செய்ய உருளைக்கிழங்கை வெட்டி, உப்பு மற்றும் எண்ணெய் கலந்த கலவையில் உருளைக்கிழங்கை முக்கி பிறகு அதை கொண்டு துருப்பிடித்த சட்டியில் தேய்க்க வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் கழுவினால் உடனே புதுசு போல மாறிவிடும்.