நாப்தலீன் உருண்டைகள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

நம் வீடுகளில் பூச்சிகள் வராமல் இருக்க, முக்கியமாக பீரோவில் பூச்சிகள் வராமல் இருக்க நாப்தலீன் உருண்டுகளை பயன்படுத்துவோம். இது முகர்ந்து பார்ப்பதற்கு அவ்வளவு சூப்பராகவும் இருக்கும். இதை நாம் அதிக அளவு பயன்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கரப்பான் பூச்சி வருவதை தடுக்க, மற்றொன்று துணியில் நறுமண வீசவும், துணிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் தான். ஆனால் இந்த சின்ன உருண்டையில் இருக்கும் கெமிக்கல் மனிதர்களாகிய நமக்கு ரொம்பவே ஆபத்தானது தெரியுமா?

ஆம், நாப்தலீன் (Naphthalene) என்ற கெமிக்கல் இந்த உருண்டையில் இருக்கிறது இது ஒரு விதமான திடப்பொருள். ஆனால் இது காற்றில் சீக்கிரமாக வாயுவாக மாறி விடக்கூடும். அந்த வாயு கண்ணுக்கு தெரியாத பூச்சிகளை மட்டும் தான் கொல்லும் என்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் அது நம் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். அந்த வாயுவை நாம் சுவாசிக்கும் போது அது நம் உடலுக்குள் சென்று பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகமொத்தம் இது ரொம்பவே விஷத்தன்மையுடையது. இந்த பதிவில் நாப்தலீன் உருண்டைகள் நம் ஆரோக்கியத்திற்கு எந்த மாதிரியான தீமைகளை ஏற்படுத்தும் என்று காணலாம்.

நாப்தலீன் உருண்டைகள் தீமைகள் ;

1. நாப்தலீன் உருண்டையில் இருக்கும் ரசாயனங்கள் மூச்சுத் திணறல், இருமல், தலைசுற்றல், தலைவலி, ஆஸ்துமா, வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

2. குழந்தைகளின் ஆடைகளில் நாங்கள் உருண்டைகளை வைக்காதீர்கள். அப்படி வைக்கும்பட்சத்தில் அது குழந்தைகளுக்கு ரத்த சோகையை உண்டாக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு தேவைப்படும் சத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச கேன்சர் ஆய்வு கண்டுபிடித்துள்ளனர்.

3. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் நாப்தலீன் வாயுவை அதிகமாக சுவாசித்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தையை மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக மரபணு பிரச்சனை, கருசிதைவு, அறிவுத் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

4. இது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை குறைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும். இதனால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

5. நாப்தலீன் உருண்டையின் வாசனையை நீண்ட நேரம் முகர்ந்தால் ரத்த சொறிவு பாதிப்பு ஏற்படும்.

6. நாப்தலீன் வாயு மூச்சு பாதையை பாதிக்கும்.

7. நாப்தலீன் வாயு கண்ணில் பட்டால் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக மாறும். சருமத்தில் பட்டால் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும்.

8. குழந்தைகள் நாப்தலீன் உருண்டைகளை விழுங்கினால் வாந்தி, பேதி, வயிற்று வலி வரலாம். அதன் கெமிக்கல் உடல் முழுவதும் பரவினால் தீவிர உடல் நல பிரச்சனைகள் உண்டாகும்.

9. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவர். இதன் காரணமாக தான் சில நாடுகளில் இந்த உருண்டையை தடை செய்துள்ளனர்.

நாப்தலீன் உருண்டைகளை பாதுகாப்பாக கையாளுவது எப்படி?

- குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் நாப்தலீன் உருண்டைகளை வையுங்கள்.

- காற்றுப்புழக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் இதை வைக்கவும்.

நாப்தலீன் உருண்டைகள் மணமாக இருந்தாலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.