எந்த ஒரு அரசியல் கட்சியினரும் எங்களைப் பற்றி சிந்திப்பதே கிடையாது என பாலியல் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் டெல்லி மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாலியல் தொழிலுக்கு முழு அனுமதி தரப்பட்டு உள்ளது. குறிப்பாக டெல்லியில் ஜிபி சாலையில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் அதே பகுதியில் ஓட்டுரிமை உள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ள கருத்து அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. 

அதில் ஒருவர் தெரிவிக்கும் போது, "இந்த தேர்தலில் நாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை. இருந்தாலும் இந்த நாட்டின் பிரஜை என்ற ஒரு உரிமையில் எங்களுக்கு ஓட்டு உள்ளது. அதன் காரணமாகவே வாக்களிக்கிறோம். அரசியல் கட்சிகள் மீது எந்த ஒரு நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை சந்திக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு என்ன தேவை எங்களுக்காக என்னென்ன உதவி செய்ய வேண்டும்? என்பது குறித்து எந்த ஒரு அரசியல் கட்சியினரும் சிந்திப்பதே கிடையாது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.