கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு கீழ் குறைந்தது..! 

கொரானா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

தொழில், வணிகத் துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் கடந்த 3 வாரங்களாகப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்து  வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிப்ஃடி 600 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகிறது. உலோகத் தொழில் நிறுவனங்கள், வங்கிகளின் பங்குகள் பத்து விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தன.

IndusInd Bank, Adani Ports ,JSW Steel, Axis Bank உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை கண்டன.உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட  காரணத்தினால்  உலக அளவில் வர்த்தகம் பாதிப்பு அடைந்து உள்ளது. அதன் எதிரொலியாக  இந்த பங்குசந்தையும் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு ஆர்வம் அதிகரித்து உள்ளதால், தங்கத்தின் விலையும் குறைந்து வருகிறது.