ஆஹா...! மார்ட்டின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய அறை ...! 

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்களுக்கு முன் சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கிய சோதனை சென்னை, கோவை, கொல்கத்தா, மும்பை, டெல்லி என நாடு தழுவிய அளவில் இந்த சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் லாட்டரி தடை விதிக்கப்பட்டதற்கு பிறகு அவர் வட மாநிலங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். கொல்கத்தாவில் அதிக அளவிலான லாட்டரி விற்பனை கிளைகளை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மார்ட்டின் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் மார்டின் தொடர்புடைய இடங்களில் சோதனைநடைப்பெற்றது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ள மார்ட்டின் வரிஏய்ப்பு செய்ததாக புகார் வந்துள்ளது. இதனிடையே கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மார்ட்டினை வருமானவரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கோவை வெள்ளக்கிணறு குதியிலுள்ள மாட்டின் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகள் ரகசிய இடத்தில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி  வீட்டுக்குள் ரகசிய அறை ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் அந்த அறைக்கு செல்வதற்கு ரகசியமான படிக்கட்டுகளை அமைத்து அதனை மறைத்து வைத்து இருந்ததையும் கண்டு பிடித்து உள்ளனர்.

பின்னர் அந்த ரகசிய அறையில் சோதனையிட்டதில் துணிப்பைகளில் 2000 ரூபாய் 500 ரூபாய் 200 ரூபாய் என கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.