Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் அன்று வீட்டில் கட்டாயம் செய்ய வேண்டிய பாரம்பரிய உணவுகள்..

இந்த தைப்பொங்கல் திருநாளில் செய்ய வேண்டிய சில பாரம்பரிய ரெசிபிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Pongal 2024 Recipes: Delicious and traditional recipes in tamil Rya
Author
First Published Jan 3, 2024, 3:24 PM IST

இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள் தான் பொங்கல் பண்டிகை. இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் செய்ய வேண்டிய சில பாரம்பரிய ரெசிபிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை பொங்கல் : 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ½ கிலோ

பாசி பருப்பு – 200 கிராம்

வெல்லம் – 1 கிலோ

பால் – ½ லிட்டர்

நெய் – 100 கிராம்

சுக்கு – சிறிதளவு

ஏலக்காய் – 10

தேங்காய் – 1

செய்முறை :

ஒரு பானையில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

பால் பொங்கி வரும் போது கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு நன்றாக வேக விடவும்

பின்னர் ஊறவைத்த பாசி பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்

அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லம் சேர்ந்து கிளறி கொண்டே இருக்கவும்.

பின்னர் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவு, பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து கிளறிய பின் ஏலக்காய், சுக்கு பவுடரை சேர்க்க வேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கும் கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.

 

பொங்கல் 2024 : எப்பவும் ஒரே மாதிரி இல்லாம, இந்த தினை பொங்கல் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..

வெண் பொங்கல் :

தேவையான பொருட்கள் :

பச்சிரி – 1 கப்

பாசிப் பருப்பு – ¼ கப்

இஞ்சி – சிறிதளவு

மிளகு – 11/2 ஸ்பூன்

சீரகம் – 1 ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

செய்முறை :

ஒரு கடாயில் பச்சரிசியை சேர்ந்து நிறம் மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் பாசிபருப்பை சேர்ந்து லேசாக வறுக்கவும்.  இரண்டையும் சேர்ந்து 1-க்கு 3 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேக வைக்கவும். பின்னர் நெய்யில் முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், கற்வேப்பிலை சேர்ந்து தாளித்து நன்றாக கிளறவும். சாம்பார் சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.

பொங்கல் தினத்தன்று செய்யப்படும் மற்றொரு பாரம்பரிய உணவு தான் பல காய்களை சேர்த்து செய்யும் காய்கறி கூட்டு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் -– ¼ கப்

அவரைக்காய் – ¼ கப்

தக்காளி – ¼ கப்

வெங்காயம் – ¼ கப்

கேரட் – ¼ க்ப

பச்சை பட்டாணி – தேவையான அலவு

மொச்சைக்கொட்டை – தேவையான அளவு

மிளகாய் தூள் – தேவையான அளவு

மல்லி தூள் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – தேவையான அலவு

தேங்காய் – தேவையான அளவு

சோம்பு- 1 ஸ்பூன்

பூண்டு – சிறிதளவு

இஞ்சி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

 

Bhogi Pongal 2024: போகி பண்டிகை அன்று மறந்து கூட பகலில் இப்படி செஞ்சிடாதீங்க! செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு தாளித்து பின்னர் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அடுத்து வெட்டி வைத்த காய்கறிகளை போட்டு நன்கு வதக்கிவிட்டு அவை வேகும் வரை தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு வேக விடவும். தேங்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். காய்கறிகள் வெந்த உடன் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி இழை தூவி இறக்கவும். சுவையான காய்கறி கூட்டு ரெடி.  

Follow Us:
Download App:
  • android
  • ios