Asianet News TamilAsianet News Tamil

கொரோனா ஊரடங்கை இப்படி செய்யுங்க போலீஸ்.!! மக்கள் யாரும் வெளியே வரமாட்டாங்க.!! ஐடியா கொடுக்கும் கிராம மக்கள்.!!

இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க இரவு நேரங்களில் பேய்கள் போல் வேடமிட்டு கிராம மக்களை போலீஸ் பயமுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Police Coronation People will never come out. !! The people who give the Idea.
Author
Indonesia, First Published Apr 15, 2020, 10:15 PM IST
T.Balamurukan

இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க இரவு நேரங்களில் பேய்கள் போல் வேடமிட்டு கிராம மக்களை போலீஸ் பயமுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Police Coronation People will never come out. !! The people who give the Idea.

சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த நிலையில், தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலை உள்ளது.இதனால் கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு வரும் பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.உலக நாடுகளில் இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா கொரோனாவால் உருகுலைந்து முதலிடத்தை பிடித்திருக்கிறது.
Police Coronation People will never come out. !! The people who give the Idea.

ஊரடங்கால் மக்களை வீட்டிற்குள் இருக்க வைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேவையின்றி வெளியில் டூவீலர்களில் சுற்றிவருபவர்கள் மீது வழக்குபதிவு செய்வதோடு,பல்வேறு விதமான விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது காவல்துறை.
Police Coronation People will never come out. !! The people who give the Idea.

 மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும் ஒரு சில நாடுகளில் மக்கள் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வழக்கம்போல் வீதிகளில் நடமாடி வருகின்றனர்.இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின் "ஜாவா" தீவில் உள்ள கெபு என்ற கிராமத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க ஒரு நூதன நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அங்குள்ள மக்களை பயமுறுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க செய்யும் விதமாக, இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு சாலைகளில் உலாவவிட்டுள்ளார் அந்த கிராமத்தின் தலைவர்.இதுபற்றி அவர் பேசுகையில், “நாங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தினோம். இது நல்ல பலனளித்துள்ளது. ஆரம்பத்தில் நாங்கள் இதை தனியாக செய்துவந்தோம். தற்போது எங்களுடன் போலீசாரும் கைக்கோர்த்துள்ளனர்” என்றார்.
Follow Us:
Download App:
  • android
  • ios