MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mosquito Bites: உங்களை மட்டும் கொசு தேடி வந்து கடிக்குதா? அறிவியல் சொல்லும் 5 காரணங்கள்!

Mosquito Bites: உங்களை மட்டும் கொசு தேடி வந்து கடிக்குதா? அறிவியல் சொல்லும் 5 காரணங்கள்!

Mosquito Bites: உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைத்து தேடி வந்து கடிக்கிறதா? சிலரை மட்டும் கொசுக்கள் ஏன் குறிவைத்துக் கடிக்கின்றன என்பதற்குப் பின்னால் பல அறிவியல் காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 03 2026, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உங்களை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதற்கான காரணம்
Image Credit : AI

உங்களை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதற்கான காரணம்

வீட்டில் நான்கு பேர் இருந்தாலும், கொசுக்கள் உங்களை மட்டும் குறிவைத்துக் கடிக்கிறதா? 'என் ரத்தம் ரொம்ப இனிப்பு, அதான் என்னைக் கடிக்குது' என்று நாம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆனால், உங்கள் ரத்தத்தின் இனிப்பு சுவை அதற்குக் காரணமல்ல. மாறாக, உங்கள் உடல் செயல்பாடுகளே காரணம். ஒருவரை மட்டும் கொசுக்கள் தொடர்ந்து குறிவைத்து கடிப்பது ஏன்? என்பதற்கான விளக்கத்தை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இதையும் படிங்க: Cleaning Hacks: தண்ணீர் பைப் உப்புக்கறை போகணுமா? 'இந்த' ஒரு பொருள் போதும்.. அசத்தல் கிளீனிங் டிப்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
1. 'O' ரத்த வகை கொசுக்களின் ஃபேவரைட்
Image Credit : pexels

1. 'O' ரத்த வகை கொசுக்களின் ஃபேவரைட்

கொசுக்களை ஈர்ப்பதில் உங்கள் ரத்த வகை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, 'O' ரத்த வகை கொண்ட நபர்களை மற்ற ரத்த வகையினரை விட இரண்டு மடங்கு அதிகமாக கொசுக்கள் கடிக்கின்றன. தோலில் இருந்து வெளிப்படும் ரசாயன சிக்னல்கள் மூலம் கொசுக்கள் ரத்த வகையை அடையாளம் காண்கின்றன.

2. நீங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

நாம் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவை, கொசுக்களால் சுமார் 100 அடி தூரத்திலிருந்தே கண்டறிய முடியும். யார் அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்களோ, அவர்களை நோக்கி கொசுக்கள் வேகமாக ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாக, கர்ப்பிணிகள் மற்றும் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றவர்களை விட அதிக CO2 வெளியிடுவதால், கொசுக்கள் அவர்களிடம் விரைவாகச் செல்கின்றன.

இதையும் படிங்க: Silver Cleaning: வெள்ளி மோதிரம் கறுத்துப்போச்சா? நிமிஷத்தில் புதுசு போல ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!

Related Articles

Related image1
HIV and Mosquitoes : கொசு கடிச்சு எய்ட்ஸ் வர வாய்ப்பு இருக்கா? நிபுணர்கள் சொல்ற விளக்கம்
Related image2
Mosquito Bite : கொசு கடியால அரிப்பு, வீக்கம் வருதா? உடனடி நிவாரணத்துக்கு சூப்பர் வீட்டு வைத்தியம்
34
3. உடல் வியர்வையும் அதன் வாசனையும்
Image Credit : Getty

3. உடல் வியர்வையும் அதன் வாசனையும்

நமது வியர்வையில் உள்ள லாக்டிக் அமிலம், அம்மோனியா மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் போன்ற சேர்மங்கள் கொசுக்களுக்குப் பிடித்தமான வாசனையைத் தருகின்றன. தோலில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையுடன் சேரும்போது ஒரு தனித்துவமான வாசனை உருவாகிறது. யாருடைய தோலில் இந்த அமிலங்களின் அளவு அதிகமாக உள்ளதோ, அவர்களைக் கொசுக்கள் அதிகமாகத் தொந்தரவு செய்கின்றன.

4. அடர் நிற ஆடைகள்

கொசுக்கள் வாசனை மூலம் மட்டுமல்ல, பார்வை மூலமும் உங்களைக் கண்டுபிடிக்கின்றன. நீங்கள் கருப்பு அல்லது அடர் நீலம் போன்ற டார்க் கலர் ஆடைகளை அணிந்திருந்தால், கொசுக்களுக்கு நீங்கள் எளிதாகத் தெரிவீர்கள். வெளிர் நிற ஆடைகளுடன் ஒப்பிடும்போது, அடர் நிற ஆடைகள் கொசுக்களை அதிகமாக ஈர்க்கின்றன.

இதையும் படிங்க:Kitchen Hacks: சமையலறைக்கு பேப்பர் டவலா? துணியா? ஆரோக்கியத்துக்கு எது பெஸ்ட்?

44
5. உடல் வெப்பம் மற்றும் ஆல்கஹால்
Image Credit : Gemini AI

5. உடல் வெப்பம் மற்றும் ஆல்கஹால்

உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர்களையும், அதிகமாக வியர்ப்பவர்களையும் கொசுக்கள் விரைவாக அடையாளம் காண்கின்றன. பீர் அல்லது ஆல்கஹால் அருந்துபவர்களை கொசுக்கள் அதிகமாகக் கடிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் அதிகரிப்பதும், வியர்வை வாசனை மாறுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆய்வுகள் சொல்வது என்ன?

மேலே குறிப்பிட்டுள்ள இரத்த வகை, கார்பன் டை ஆக்சைடு, வியர்வை, ஆடைகளின் நிறம் மற்றும் உடல் வெப்பம் ஆகியவற்றைத் தவிர, தோலில் வாழும் நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பும் கொசுக்களை ஈர்ப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மனிதர்களின் தோலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.

ஆனால், ஒவ்வொரு நபரின் தோலிலும் உள்ள பாக்டீரியாக்களின் வகைகளும் அதன் எண்ணிக்கையும் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான அதிக அளவிலான பாக்டீரியாக்களை விட, தோலில் பலதரப்பட்ட பாக்டீரியாக்களின் கலவை குறைவாகவும், குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் அதிகமாகவும் இருக்கும் நபர்களைக் கொசுக்கள் மிக எளிதாகக் கண்டறிந்து கடிக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?
Recommended image2
Fact: அமெரிக்காவில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் இவ்வளவு தான் கையில் நிக்குமாம்.! ஒரு மாத செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
Recommended image3
Coriander: மண் இல்லாம, பிளாஸ்டிக் பாட்டில்ல கொத்தமல்லி வளர்க்கலாம்! எப்படினு தெரிஞ்சுக்கோங்க
Related Stories
Recommended image1
HIV and Mosquitoes : கொசு கடிச்சு எய்ட்ஸ் வர வாய்ப்பு இருக்கா? நிபுணர்கள் சொல்ற விளக்கம்
Recommended image2
Mosquito Bite : கொசு கடியால அரிப்பு, வீக்கம் வருதா? உடனடி நிவாரணத்துக்கு சூப்பர் வீட்டு வைத்தியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved