MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • TV Remote: டிவி ரிமோட் வேலை செய்யலையா? வீட்டிலேயே 5 நிமிடத்தில் சரி செய்ய 'சூப்பர்' டிப்ஸ்!

TV Remote: டிவி ரிமோட் வேலை செய்யலையா? வீட்டிலேயே 5 நிமிடத்தில் சரி செய்ய 'சூப்பர்' டிப்ஸ்!

TV Remote: ஆர்வமாக டிவி பார்க்கும்போது ரிமோட் வேலை செய்யாமல் போகும்போது கடுப்பாகும். கோபத்தில் அந்த ரிமோட்டை தூக்கி வீசி விடாதீர்கள். வீட்டிலேயே டிவி ரிமோட்டை 5 நிமிடத்தில் சரி செய்வது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 03 2026, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிவி ரிமோட்டை வீட்டிலேயே சரி செய்ய சூப்பர் டிப்ஸ்
Image Credit : AI

டிவி ரிமோட்டை வீட்டிலேயே சரி செய்ய சூப்பர் டிப்ஸ்

வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென ரிமோட் வேலை செய்யாமல் போனால் ஏற்படும் எரிச்சலை சொல்ல வார்த்தைகளே இல்லை. ரிமோட்டின் பேட்டரியை உடனே மாற்றிப் பார்ப்போம், அப்போதும் வேலை செய்யாவிட்டால், ரிமோட் வீணாகிவிட்டது என நினைத்து புதியதை வாங்க கிளம்பிவிடுவோம்.

ஆனால், உங்கள் TV remote-ஐ சரிசெய்ய சில எளிய வழிகள் உள்ளன. பெரும்பாலான ரிமோட் கோளாறுகளை வெறும் 10 நிமிடங்களில், வீட்டிலேயே சரிசெய்துவிட முடியும் என்பதுதான் உண்மை. பொதுவாக ரிமோட் பழுதாக பெரிய மின்சார கோளாறுகள் காரணம் இல்லை. உள்ளே சேர்ந்த தூசி, எண்ணெய் பிசுக்கு, பேட்டரி முனைகளில் படியும் துரு போன்ற பிரச்னைகள்தான் அதன் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. எனவே, புதிய ரிமோட் வாங்கும் முன் இந்த வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்.

இதையும் படிங்க:Mosquito Bites: உங்களை மட்டும் கொசு தேடி வந்து கடிக்குதா? அறிவியல் சொல்லும் 5 காரணங்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிமோட்டை பிரிக்காமலேயே சரிசெய்யலாம்
Image Credit : Gemini AI

ரிமோட்டை பிரிக்காமலேயே சரிசெய்யலாம்

முதலில், உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை ஆன் செய்து, ரிமோட்டின் நுனியில் உள்ள IR பல்பை கேமராவுக்கு நேராக காட்டுங்கள். இப்போது ரிமோட்டில் ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தும்போது, போன் திரையில் ஊதா நிற ஒளி தெரிந்தால், ரிமோட் சிக்னல் அனுப்புகிறது என்று அர்த்தம். பிரச்னை டிவியின் சென்சாரில் இருக்கலாம். ஒளி தெரியவில்லை என்றால், கோளாறு ரிமோட்டில்தான். அடுத்ததாக, ரிமோட்டில் இருந்து பேட்டரிகளை முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.

பிறகு, பவர் பட்டனை சுமார் 30 விநாடிகள் அழுத்திப் பிடிக்கவும். இது உள்ளே தேங்கியிருக்கும் தேவையற்ற மின்சாரத்தை வெளியேற்றும். அதன்பின், புதிய பேட்டரிகளைப் பொருத்தி சோதித்துப் பாருங்கள். பேட்டரி வைக்கும் இடத்தில் துரு அல்லது அழுக்கு படிந்திருந்தால், அதை ஒரு பென்சில் அழிப்பான் அல்லது லேசான ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்வதும் அவசியம்.

இதையும் படிங்க: Cleaning Hacks: தண்ணீர் பைப் உப்புக்கறை போகணுமா? 'இந்த' ஒரு பொருள் போதும்.. அசத்தல் கிளீனிங் டிப்ஸ்!

Related Articles

Related image1
Smart TV: புது டிவி வாங்கியாச்சா? சுவரில் மாட்டுவது நல்லதா.. டேபிளில் வைப்பது நல்லதா?
Related image2
20 இன்ச் TV ஓவர்… 300 இன்ச் ப்ரொஜெக்டர் வந்தாச்சு.. விலை இவ்வளவு தானா!
34
ரிமோட்டை கழற்றி சுத்தம் செய்வது எப்படி?
Image Credit : Gemini AI

ரிமோட்டை கழற்றி சுத்தம் செய்வது எப்படி?

மேற்கண்ட வழிகளில் பலன் இல்லையென்றால், ரிமோட்டின் உள்ளே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. பேட்டரிகளை அகற்றிவிட்டு, ரிமோட்டின் திருகுகளைக் கழற்றுங்கள். ஒரு மெல்லிய பிளாஸ்டிக் அட்டை அல்லது பிரையிங் டூல் கொண்டு, ரிமோட்டின் பக்கவாட்டுப் பகுதிகளை மெதுவாகப் பிரித்துத் திறக்கவும். உலோகக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம், அது சர்க்யூட் போர்டை சேதப்படுத்தக்கூடும்.

உள்ளே இருக்கும் ரப்பர் கீ-பேட் மற்றும் பச்சை நிற சர்க்யூட் போர்டை (PCB) தனித்தனியாகப் பிரிக்கவும். ஒரு பஞ்சில் ஐசோபுரோப்பைல் ஆல்கஹாலை சிறிதளவு எடுத்து, சர்க்யூட் போர்டை மெதுவாகத் துடைத்து சுத்தப்படுத்துங்கள். ரப்பர் கீ-பேடை சோப்பு நீரில் கழுவி, அது காய்ந்த பிறகு மீண்டும் பொறுத்த வேண்டும். ஈரம் சிறிதளவு இருந்தாலும் ரிமோட் மீண்டும் பழுதடைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: Kitchen Hacks: சமையலறைக்கு பேப்பர் டவலா? துணியா? ஆரோக்கியத்துக்கு எது பெஸ்ட்?

44
டிவி ரிமோட் வேலை செய்யலனா மாற்று வழிகள் என்ன?
Image Credit : Gemini AI

டிவி ரிமோட் வேலை செய்யலனா மாற்று வழிகள் என்ன?

இவை அனைத்தையும் செய்த பிறகும் ரிமோட் வேலை செய்யவில்லை என்றால், அதன் IR LED அல்லது மைக்ரோசிப் போன்ற உள் பாகங்கள் சேதமடைந்திருக்கலாம். மேலும், ரிமோட் கீழே விழுந்து உடைந்திருந்தாலோ அல்லது தண்ணீர் பட்டிருந்தாலோ, பழுதுபார்ப்பதை விட புதியது வாங்குவதே புத்திசாலித்தனம். ஆகவே அடுத்த முறை ரிமோட் வேலை செய்யவில்லை என்றால், தூக்கி எறிவதற்கு முன் மேற்கண்ட டிப்ஸ்களை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mosquito Bites: உங்களை மட்டும் கொசு தேடி வந்து கடிக்குதா? அறிவியல் சொல்லும் 5 காரணங்கள்!
Recommended image2
Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?
Recommended image3
Fact: அமெரிக்காவில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் இவ்வளவு தான் கையில் நிக்குமாம்.! ஒரு மாத செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
Related Stories
Recommended image1
Smart TV: புது டிவி வாங்கியாச்சா? சுவரில் மாட்டுவது நல்லதா.. டேபிளில் வைப்பது நல்லதா?
Recommended image2
20 இன்ச் TV ஓவர்… 300 இன்ச் ப்ரொஜெக்டர் வந்தாச்சு.. விலை இவ்வளவு தானா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved