ஃப்ரீசரில் வைக்கக்கூடாத முக்கியமான 5 பொருட்கள் இதோ..!!
முதல் எல்லா பொருட்களையும் கொண்டுபோய் ஃப்ரீசரில் வைப்பதை தவிர்த்திடுங்கள். எப்போதும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை ஃப்ரீசரில் வைக்கவே கூடாது.
நம்மில் பலரும் பொருட்கள் மலிவு விலையில் அதிகமாக கிடைக்கும் போது, வாங்கி சேமித்து வைத்துக்கொள்வோம். ஆனால் கொரோனாவுக்கு பிறகான காலக்கட்டத்தில், பொருட்களை வாங்கி குவித்துப் போடும் பழக்கம் பலரிடையே அதிகரித்துவிட்டது. அதற்கேற்றவாறு பல்வேறு நிறுவனங்கள் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசர் பகுதி பெரியளவில் இடவசதியுடன் தயாரித்து வழங்குகின்றன. இதனால் எந்த பொருட்களை வாங்கினாலும், ஃப்ரீசரில் கொண்டுபோய் திணிக்கும் பழக்கம் பலரிடையே நிலவுகிறது. மூச்சு முட்டும் அளவுக்கு பொருட்கள் ஃப்ரீசரில் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் எந்த பொருட்களை ஃப்ரீசரில் வைப்பது, எதையெல்லாம் வைக்கக்கூடாது என்பதில் பலருக்கும் தெளிவு இருப்பதாக தெரியவில்லை. அந்தவகையில் ஃப்ரீசரில் சேமித்து வைக்கக்கூடிய பொருட்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பால் பொருட்கள்
நம்முடைய வீடுகளில் லிட்டர் கணக்கில் பால் வாங்குகிறோம். ஆனால் அதை ஃப்ரீசருக்கு கீழேவுள்ள ட்ரே தட்டில் வைப்பது பலருடைய வழக்கம். ஆனால் அது ஃப்ரீசருக்கு கீழே இருப்பதால், பால் மற்றும் பால் பொருட்கள் எளிதில் உறைந்துப் போகும். இதை நாம் சாப்பிடும் போது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் ஃப்ரீசரை விட்டு அவற்றை சற்று தள்ளி வையுங்கள். மேலும் பால் பொருட்களை கொண்டுபோய் ஃப்ரீசரில் வைப்பதால், மட்டும் அதனுடைய ஆயுள் அதிகரித்துவிடாது.
பழங்கள்
எப்போதும் பழங்களை ஃப்ரீசரில் வைக்க கூடாது. அதேபோன்று ஃப்ரீசருக்கு அருகிலுள்ள ட்ரே தட்டிலும் வைக்கக்கூடாது. ஐஸில் அவை உறைந்துபோனால், பழங்கள் மூலம் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து எதுவும் நமக்கு கிடைக்காது. அதேபோல பழங்களின் மேற்புறப் பகுதிகளிலுள்ள சுவையும் மாறிப் போய்விடும். உலர்ந்த நிலையில் கிடைக்கும் திராட்சை, அத்திப் பழம், ஆரஞ்சு போன்றவற்றை வேண்டுமானால் ஃப்ரீசரில் வைக்கலாம்.
சாஸ்
இன்று பல்வேறு இந்திய சமையல்களிலும் சாஸ் வகைகள் உட்புகுந்துவிட்டன. தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் இல்லாமல் எந்தவித சமையலும் நடப்பது இல்லை. இதனால் சாஸ் பாட்டில் ஆஃப்ரில் கிடைக்கும் போது, அதை வாங்கி ஃப்ரிட்ஜில் சேமிப்பது பலருடைய வழக்கம். அதாவது ஃப்ரிட்ஜில் வைப்பதால் மட்டும் சாஸ்களின் ஆயுள் கூடிவிடும் என்பது இல்லை. அதனால் ஃப்ரீசரில் வைப்பதிலும் பலன் கிடைக்காது. ஒருவேளை நீங்கள் அதையும் மீறி ஃப்ரீசரில் வைத்தால், அதில் கலக்கப்பட்டு இருக்கும் மூலப் பொருட்கள் தனித்தனியாக பிரிந்து, உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பாக்கெட் பொருட்கள்
பாக்கெட்டில் கிடைக்கும் காபி மற்றும் நூடூல்ஸ் போன்ற பொருட்களை ஃப்ரீசரில் வைக்கவே கூடாது. காபிப் பொடி பாக்கெட்டை ஃப்ரீசரில் வைப்பதால், அதற்கு உரித்தான சுவை மாறிவிடும். மணமும் இருக்காது. ஒருவேளை நீங்கள் இன்ஸ்டட் காபிப் பொடியை வைத்தால், அதனுடைய பாடு திண்டாட்டம் தான். அது உறைந்துப் போய் கட்டியாகிவிடும். உபயோகமற்று போய்விடும். அதேபோல ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நூடூல்ஸ் பொருட்கள் குளிர்ந்துபோய் மென்மையாகிவிடும். அதையும் பயன்படுத்த முடியாது.
வாட்டர்பாட்டில் போட்டு வாஷிங் மெஷினில் துணி துவைத்து பாருங்க- அற்புதம் நடக்கும் நம்புங்கள்..!!
தானியங்கள்
சிலர் வறுத்த உணவுகள், தானிய வகைகளை ஃப்ரீசரில் வைப்பதை பார்த்திருப்போம். அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றாலும், அந்த பொருட்களுக்கே உரித்தான மொறு மொறு சுவை முற்றிலுமாக போய்விடும். அதேபோல ஒருவேளை நீங்கள் மறந்துபோய் ஃப்ரீசரில் வைத்துவிட்டாலும், உடனடியாக எடுத்து சமைக்கக்கூடாது. அந்த பொருட்கள் அறை தட்பவெட்பநிலைக்கு வந்த பிறகு சமையலுக்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள பொருட்களைத் தவிர, ஃப்ரீசரில் வைக்கக்கூடிய பொருட்களை பார்க்கலாம். கீரை வகைகள், நார்சத்து மிகுந்த காலிஃபிளவர், குடைமிளகாய், இறைச்சி வகைகள், மஞ்சள் மற்றும் உப்பு தடவிய மீன் போன்றவற்றை தாராளமாக ஃப்ரீசரில் வைக்கலாம். அதேபோல பலரும் முன்னதாக இஞ்சிப் பூண்டு அரைத்து ஃப்ரீசரில் ஸ்டோர் செய்வதுண்டு. முடிந்தவரை அதை 7 நாட்களுக்குள் காலி செய்துவிடுங்கள். அதற்குமேல் அந்த பொருட்களை பயன்படுத்தினால், எந்த பலனும் கிடையாது.