வாட்டர்பாட்டில் போட்டு வாஷிங் மெஷினில் துணி துவைத்து பாருங்க- அற்புதம் நடக்கும் நம்புங்கள்..!!
சாதாரணமாக வாஷிங் மெஷினில் துணி துவைப்பதை விடவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி துணிகளை துவைத்தால் துணிகளும் பாதிக்கப்படாது, வாஷிங் மெஷினில் ஆயுளும் நீண்ட நாட்களுக்கு வரும்.
பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ஹோம் அப்ளையன்சஸ் பொருட்கள் தான். ஆனால் அதேசமயத்தில் அதனால் தலைவலியும் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. சில ஹோம் அப்ளையன்சஸ் பொருட்களை பயன்படுத்த தெரியாததால் தான் தலைவலி ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று வாஷிங் மெஷின்கள். பல்வேறு நவீன மற்றும் தொழில்நுட்பம் கொண்ட சலவலை இயந்திரங்கள் வந்துவிட்டன. எனினும், ஒரு சிலருக்கு இன்னும் அதை அப்படி பயன்படுத்த வெண்டும் என்கிற அறியாமை உள்ளது. எல்லாவிதமான துணிகளையும் வாஷிங் மெஷின்கள் துவைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவற்றை எப்படி துவைப்பது? ஒவ்வொரு துணிகளுடைய பண்புநலன் என்ன? எப்படி அதற்கேற்றவாறு துணிகளை துவைக்க வேண்டும்? என்கிற அறியாமை பலரிடையே நிலவுகிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
முதல் முயற்சி இதுதான்
வாஷிங் மெஷினுக்குள் துணிகளை போடுவதற்கு என்று சில வரைமுறைகள் உண்டு. நீளமான புடவை போன்ற துணிகள், மிகவும் கெட்டியான துணிகள் போன்றவற்றை மெஷினுக்குள் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக புடவை போன்ற மெல்லிய துணிகளை துவைக்கும் போது, அதனுடன் மெல்லிய துணிகளை தான் போட வேண்டும். துப்பட்டா, கைக்குட்டை, ஸ்டோல் போன்ற துணிகளை போடலாம். அதேபோல கெட்டியான ஜீன்ஸ், டீ-ஷர்ட் போடும் போதும் அப்படி தான். உடன் கெட்டியான துணிகளை தான் போட்டு துவைக்க வேண்டும்.
அடுத்து, இதைச் செய்யுங்கள்
நீங்கள் எப்போது சலவை இயந்திரத்தில் துணி போட்டாலும், துணிகளை தனித்தனியாக போட வேண்டும். ஒன்றோடு ஒன்று அள்ளி போடக்கூடாது. அப்படி போட்டால் துணிகள் மெஷினுக்குள் சிக்கிக்கொள்ளும். இதனால் சலவை இயந்திரம் சுத்துவதற்கு சிரமபப்படும். புடவை போன்ற நீளமான துணிகளை போடும் போது, இதை பின்பற்றுவது முக்கியம். அப்போது தான் துவைத்து முடித்த பின், துணிகளை எடுப்பதற்கு எளிதாக இருக்கும். அதேபோல முதலில் வேண்டிய துணிகளை தனித்தனியாக போட்டுவிட்டு, அதில் தண்ணீர்விட்டு சோப் தூள் போட்டு ஊறவையுங்கள். அப்போதுதான் துவைக்கும் போது, துணிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொள்ளாமல் தனித்தனியாக வெளுக்கப்படும்.
மண்ணினால் செய்யப்பட்ட குவளைகளில் ‘டீ’ குடிப்பதில் கிடைக்கும் மகத்துவம்..!!
உதவி செய்யும் வாட்டர் பாட்டில்
எல்லாவிதமான துணிகளையும் ஒன்றாக சேர்த்து துவைக்க வேண்டிய தேவை பலருக்கும் ஏற்படும். அப்போது, துணிகளை தனித்தனியாக சுற்றி சுற்றி மெஷினுக்குள் போட்டுவிட வேண்டும். மெல்லிய துணிகளை முதலில் போட்டுவிட்டு, மெஷினின் நடுப்பகுதி நன்றாக தெரியும் விதத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதையடுத்து ஒரு மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாட்டர்பாட்டிலை நடுப்பகுதியில் சொறுகிவிட வேண்டும். அதற்கு பிறகு ஜீன்ஸ், போர்வை உள்ளிட்ட கெட்டியான துணிகளை மெஷினுக்குள் போட்டுக்கொள்ளுங்கள். இப்போது தண்ணீர் ஊற்றி நன்றாக துவைக்க வேண்டும்.
சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து கொப்பளித்தால் உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
வாட்டர் பாட்டில் செய்யும் மேஜிக்
நடுப்பகுதியில் வாட்டர் பாட்டில் இருப்பதால், தண்ணீரை உள்ளே விடும்போது, அது மிதக்கும். எனினும், இது துணிகளை சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். இதனால் துணிகளும் பாதுகாப்பாக இருக்கும், வாஷிங் மெஷினின் செயல்பாடுகளும் இலகுவாக இருக்கும். துணிகளுக்கு ஏற்ப அரைலிட்டர் காலியான வாட்டர்கேன் முதல் ஒருலிட்டர் வாட்டர்கேன் வரை பயன்படுத்தலாம். ஆனால் அது சலவை இயந்திரத்திற்குள் போடும் போது மூடியிருக்க வேண்டும், அதில் எந்தவிதமான ஸ்டிக்கரும் உடன் இருக்கக்கூடாது. முடிந்தவரையில், சுத்தமாக இருந்தால் நல்லது.