மண்ணினால் செய்யப்பட்ட குவளைகளில் ‘டீ’ குடிப்பதில் கிடைக்கும் மகத்துவம்..!!
பீங்கான் மற்றும் எவர் சில்வர்களால் செய்யப்பட்ட குவளைகளில் தேநீர் அருந்திப் பாருங்கள். புதுவித சுவையுடன், உடலுக்கும் அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட குவளைகளில் தேநீர் கிடைக்கிறது. இதை குடிக்கும் போது, புதுவித சுவை நாவில் ஏற்படுவது தெரியும். வட இந்தியாவில் மண் குவளைகளில் தேநீர் குடிப்பதை ‘குல்ஹாத்’ என்று குறிப்பிடுகின்றனர். பழங்காலத்தில் மக்கள் பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களை விடவும் மண் குவளைகள் மூலமாகவே உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளனர். இது மிகவும் எளிமையானது மட்டுமல்லாமல், அதில் டீ குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. தற்போது காலம் மாறிவிட்டதால் மக்கள் கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களில் டீ மற்றும் காபி குடித்து வருகின்றனர். எனினும், பல்வேறு புதிய முறைகள் வாயிலாக மீண்டும் மண் குவளையில் டீ சாப்பிடும் நடைமுறை துவங்கியுள்ளது. இந்த தேநீர் சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் மிகவும் நன்மை பயக்குவதாக உள்ளன. அப்படியானால் இன்று மண் குவளையில் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
மிகவும் சுகாதாரமானது
மண் குவளையில் தேநீர் குடிப்பது மிகவும் சுகாதாரமானது. ஏனென்றால் பீங்கான் பாத்திரங்களை மீண்டும் மீண்டும் கழுவிய பின், அதில் டீ அல்லது காபி குடிப்பீர்கள். அதற்கு பதிலாக மண் குவளையில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துவது மிகவும் சுகாதாரமானது. அதற்கு பிறகு மீண்டும் அதை உருகுலைத்து மண் குவளை செய்யலாம். இதன்மூலம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் நிகழாது அதனால் மண் குவளையில் தேநீர் குடிப்பது உடல்நலனுக்கு பல்வேறு வகையில் நன்மையை தரும்.
அமிலத்தன்மையை நீக்குகிறது
பொதுவாகவே மண் குவளைகளில் இயற்கையான அல்கீன் உள்ளது. இது டீ குடிப்பதால் வயிற்றில் அமிலம் உருவாவதைத் தடுக்கிறது. பெரும்பாலானோருக்கு டீ குடித்தவுடன் அசிடிட்டி வர ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் களிமண் குவளையில் டீ குடித்தால், உங்களுக்கு புளிப்பு ஏப்பம், அமிலத்தன்மை மற்றும் செரிமான பிரச்சனைகள் எதுவும் வராது.
நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவோர் கவனத்துக்கு..!!
தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
நீங்கள் தெரு முனையிலோ அல்லது எந்த ஒரு டீக்கடையிலோ டீ குடிக்கும் போது, பிளாஸ்டிக் பொருட்களில் தான் பெரும்பாலும் தேநீர் பரிமாறப்படுகிறது. இதனால் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கப்புகளில் பல்வேறு ரசாயனங்கள் காணப்படுகின்றன. மறுபுறம், கண்ணாடி பாத்திரங்கள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக அவை தொற்றுநோயை ஏற்படுத்தும். அதை தடுப்பதற்கு மண் குவளைகளை பயன்படுத்தி தேநீர் அருந்தலாம்.
காகித கப்புகள் என்று நம்பிவிட வேண்டாம்
பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக சந்தைகளில் காகிதம் கொண்டு தயாரிக்கப்படும் கப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு ஸ்டைரோஃபோம் என்று பெயர். உண்மையில் இவை காகிதம் கொண்டு தயாரிக்கப்படுபவை அல்ல, இதை தயாரிக்க பாலிஸ்ட்ரீன் என்கிற பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தேநீர் அல்லது வேறு ஏதேனும் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும் இந்த கப்பில் எதையாவது சாப்பிட்டால் ஹார்மோன் கோளாறுகள், கவனம் இல்லாமை, சளி பிரச்சனைகள் மற்றும் நெஞ்சரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதேசமயம் மண்குவளையை டீ குடிப்பதற்கு பயன்படுத்துவதில் எந்த எதிர்மறையான விளைவும் இல்லை.
சிறு தொழில்கள் வளரும்
பெரும்பாலும் மண் குவளைகள் கிராமப் பகுதிகளில் தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. சில குடும்பங்களுக்கு மட்பாண்டங்கள் மட்டுமே சம்பாதிக்கும் வழி. அதனால் மண் குவளைகளில் தேநீர் அருந்துவது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மேலும் வேலைவாய்ப்பு பெரும். அதனால் மண்பாண்ட தொழிலாளர்களை ஆதரித்து, அவர்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்வதற்கு மண் பாத்திரங்களை பயன்படுத்துவது ஊக்கமாக அமையும்.