நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவோர் கவனத்துக்கு..!!
சமையலின் போது டெஃப்ளான் பூசப்பட்ட பாத்திரங்களில் இருந்து மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் வெளியிடப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய காலத்தில் பொதுவாக அனைவரும் சமையலுக்கு நான் ஸ்டிக் பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். தோசை, ஆம்லெட், சப்பாத்தி போன்றவற்றை எளிதில் தயார் செய்வதற்காக, பெரும்பாலானோர் நான்-ஸ்டிக் பாத்திரங்களையே வாங்குகின்றனர். இந்த பாத்திரத்தை உபயோகிப்பதன் மூலம் உணவில் குறைந்த அளவு எண்ணெய் சேர்கிறது என்பதும் சிலரின் கருத்து. அதுமட்டுமின்றி, மற்ற பாத்திரங்களுடன் ஒப்பிடும் போது, நான் ஸ்டிக்கில் சமைக்கும் போது உணவு பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கிறது, அதனால் அது சமைக்க எளிதாக உள்ளது என பலரும் எண்ணுகின்றனர். இதுதவிர, நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது எளிது, பெரியளவில் பராமரிப்பும் தேவைப்படாது. இதுபோன்ற காரணங்களால் பலரும் நான் ஸ்டிக் பாத்திரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். வசதியின் காரணமாக, அதிலுள்ள ஆபத்துக்கள் அவர்களுக்கு தெரியாமல் உள்ளது.
டெல்ஃபான் பூசப்பட்ட பாத்திரங்களில் சமையல் செய்யும் போது மில்லியன் கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் வெளிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் படிப்படியாக அவற்றின் பூச்சுகளை இழப்பதால், சமைக்கும் போது ஆயிரக்கணக்கான முதல் மில்லியன் வரையிலான அல்ட்ரா-சிறிய டெஃப்ளான் பிளாஸ்டிக் துகள்கள் வெளிவருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். மொத்த சுற்றுச்சூழல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, டெஃப்ளான் பூசப்பட்ட பானின் மேற்பரப்பில் ஒரு சிறிய விரிசல் சுமார் 9,100 பிளாஸ்டிக் துகள்களை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போது மற்றும் கழுவும் போது மில்லியன் கணக்கான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் எவ்வாறு உடைகின்றன என்பதை மதிப்பீடு செய்துள்ளனர். உடைந்த பூச்சிலிருந்து 2.3 மில்லியன் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோபிளாஸ்டிக்ஸ் வெளிவருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
டெஃப்ளான் என்பது பாலிடெட்ராபுளோரோஎத்திலீன் என்ற வேதிப்பொருளின் பிராண்ட் பெயர். கார்பன் மற்றும் ஃவுளூரின் மட்டுமே கொண்ட செயற்கை பாலிமர். இது மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களில் ஒன்றாகும். இந்த இரசாயனங்கள் நிரந்தர இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை சுற்றுச்சூழலில் எளிதில் உடைந்து போகாது மற்றும் பல தலைமுறைகளாக தொடர்ந்து நிலைத்து இருக்கும்.
சளி, கபம், மூச்சுத்திணறலை ஓட ஓட விரட்டும் சூப்பர் சூப்.!!
டெல்ஃபான் நான்-ஸ்டிக் பூச்சு பொருள் பெரும்பாலும் PFAS இன் ஒரு வடிவமாகும். PFAS, அறிவியல் ரீதியாக பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஒட்டாத சமையல் பாத்திரங்கள், நீர்ப்புகா அழகுசாதனப் பொருட்கள், தீயணைக்கும் நுரைகள் மற்றும் கிரீஸ் மற்றும் எண்ணெயை எதிர்க்கும் வணிகப் பொருட்களில் காணப்படும் இரசாயன வகையாகும். இது 1940 களில் இருந்து வணிக பயன்பாட்டில் உள்ளது.
ஹோம்சிக் கொண்ட நபரா நீங்கள்..? அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்..!!
முந்தைய ஆராய்ச்சி இந்த இரசாயனங்களின் பயன்பாடு பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து மற்றும் ஹார்மோன் சீர்குலைவு ஏற்பட்டு, அதன்மூலம் பல்வேறு வகையான புற்றுநோய் அபாயங்களுக்கு வழிவகுக்கப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமைக்கும் போது டெஃப்ளான் பூசப்பட்ட பாத்திரங்களில் இருந்து மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் வெளியிடப்படுகிறது. ஒரே மாதிரி சாப்பிடுவது, குடிப்பது மற்றும் சுவாசிப்பது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.