Parenting Tips : குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்க சரியான வயது எது தெரியுமா? பெற்றோர்களே அவசியம் தெரிஞ்சுக்கோங்க
Parenting Tips : குழந்தைகளுக்கு டீ அல்லது காபி கொடுப்பது ஆரோக்கியமானதா? ஆனால் எந்த வயதில் கொடுப்பது நல்லது? என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய நாட்டில் டீ காபி பிரியர்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். பொதுவாகவே, இவற்றை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். சிலர் தங்கள் நாளை டீ காபி உடன் தொடங்க விரும்புவார்கள். சிலர் நாள் முழுவதும் கொடுத்தல் கூட குடிக்க விரும்புவார்கள். டீ மற்றும் காபியில் நன்மை மற்றும் தீமை உள்ளது என்பதை பெரியவர்கள் அறிவார்கள். ஆனால், குழந்தைகள் அதைப்பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில், குழந்தைகளுக்கு டீ அல்லது காபி கொடுப்பது ஆரோக்கியமானதா? ஆனால் எந்த வயதில் கொடுப்பது நல்லது? என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை கண்டிப்பா கொடுங்க.. நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!
குழந்தைகளுக்கு டீ அல்லது காபி எப்போது கொடுக்கலாம்?
நிபுணர்களின் கூற்றுப்படி 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு பதில் அல்லது காபி கொடுக்கவே கூடாது. அது அவர்களுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் இதன் காரணமாக அவர்களின் வளர்ச்சி கூட நிறுத்தப்படலாம். ஒருவேளை, உங்கள் குழந்தைக்கு டீ அல்லது காபி கொடுத்தால் உடனே அதை நிறுத்துங்கள். உண்மையில், காஃபின் காபியில் உள்ளது.. இது மூளையை தூண்டுகிறது மற்றும் இதய துடிப்பை அதிகரிக்க செய்கிறது. மேலும், இது இரைப்பை அமிலத்தன்மை, வயிற்று வலி, செறிவு பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளின் தூக்கமும் கெடும். குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படும் போது அவர்களது உடல் வளர்ச்சியும் தானாக தடைப்படும்.
இதையும் படிங்க: உங்க குழந்தையை இப்படி பழக்கப்படுத்துங்க.. லைப்ல நல்லா இருப்பாங்க!!
குழந்தைகளுக்கு ஏன் டீ அல்லது காபி கொடுக்கக் கூடாது?
டீயில் டானின் உள்ளது. இது குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்புகளை பலவனப்படுத்தும். மேலும் சில குழந்தைகள் டீ-க்கு அடிமையாகி விடுவதால், அது அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும். மேலும் டீ மற்றும் காபியில் இருக்கும் டானின் மற்றும் காஃப்பின் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சர்க்கரை உள்ளடக்கம்:
டீ மற்றும் காபியில் காஃபின் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு கப் சிறிய அளவு அதுவும், 14 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இந்த சமயங்களில் கொடுக்கலாம்:
- காய்ச்சல் : உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு அல்லது மூன்று ஏலக்காய் சேர்த்து டீ போட்டு கொடுக்கலாம். இதனால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
- குமட்டல் : குழந்தைகளுக்கு குமட்டல் வருவது பொதுவானது. ஏனெனில், அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ந்து வருகிறது. வீக்கம் மற்றும் வாந்தியை நிறுத்த மூலிகை தேநீர் கொடுக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D