மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை கண்டிப்பா கொடுங்க.. நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!
Monsoon Diet Tips For Kids in Tamil : மழைக்காலங்களில் குழந்தைகளின் உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இது நோய் தொற்று அபாயத்தை குறைக்கும் மற்றும் அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தற்போது பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவத்தில், ஒரு சிறிய கவன குறைவு கூட உடல்நலக் குறைவு மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, இத்தகைய சூழ்நிலையில் நாம் உணவில் சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால் நோய்வாய்ப்படலாம்.
மாறிவரும் வானிலை மற்றும் மழை காரணமாக பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகும். அதுவும் குறிப்பாக, குழந்தைகளைப் பற்றி பேசினால் அவர்கள் மிகவும் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். இதனால், காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல், வயிற்றில் தொற்று போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படும். மழையில் நனைந்தாலோ அல்லது மோசமான உணவுகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
இதையும் படிங்க: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
எனவே, இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கட்டாவிட்டால், அவர்கள் மஞ்சகாமாலை, டைபாய்டு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவும். இந்த பருவத்தில் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றி, ஆரோக்கியமான உணவை அவர்களுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். இந்த உணவுகள் குழந்தைகளின் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். எனவே, மழை காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய 5 சூப்பர் ஃபுட் இதோ..!
மழை காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:
1. பாகற்காய்:
பெரும்பாலான குழந்தைகள் இதை சாப்பிட விரும்புவதில்லை. ஏனெனில், அதன் சுவை கசப்பாக இருக்கும். ஆனால், மழைக்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது. இதில், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
2. பருப்பு வகைகள்:
மழைக்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க அவர்களின் உணவில் பல்வேறு வகையான பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும். ஏனெனில், இது புரதம் மற்றும் ஆற்றலின் சிறந்த மூலமாகும். இது பருவ கால நோய் தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும். அதுமட்டுமின்றி, மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பருப்பு தண்ணீர் அல்லது பருப்பை மசித்து ஊட்டலாம். இதன் காரணமாக குழந்தைகளின் உடல் வேகமாக முன்னேறும்.
3. மஞ்சள் பால்:
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மஞ்சள் பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனெனில், மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறனையும் மேம்படுத்துகிறது.. அதுமட்டுமின்றி, இது குழந்தைகளின் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
4. உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்கள்:
மழை காலத்தில் குழந்தைகளுக்கு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்கள் சாப்பிட கொள்ளுங்கள். இவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகும். மேலும், இதில் இருக்கும் சத்துக்கள் மழைக்காலத்தில் குழந்தைகள் ஆற்றலுடன் வைப்பதோடு, அவர்களின் வளர்ச்சிதை மாற்றத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
5. பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள்:
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட கொடுங்கள். ஏனெனில், இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவைகள் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D