Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர்களே.. தினமும் காலை இந்த 5 விஷயங்களை செய்ங்க.. உங்க குழந்தை புத்திசாலியாகும்!

Parenting Tips : உங்கள் குழந்தைக்கு நாளின் ஆரம்பம் சிறப்பாக இருக்கவும், அவர்களது மூளையின் வளர்ச்சிக்கு உதவவும் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இங்கே.

parenting tips 5 morning habits to boost intelligence in your child in tamil mks
Author
First Published Aug 30, 2024, 1:11 PM IST | Last Updated Aug 30, 2024, 1:14 PM IST

ஒவ்வொரு பெற்றோரும் தினமும் காலை குழந்தைகள் எழுந்தவுடன் அவர்களை கிளப்பி, உணவு ஊட்டி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், குழந்தைகள் காலை எழுந்தவுடன் பள்ளிக்கு தயாராவது மட்டும் முக்கியமல்ல, அவர்களிடம் பெற்றோர்களாகிய நீங்கள் நடந்து கொள்ளும் முறைகள் தான் அந்நாள் முழுவதும் அவர்களை சுறுசுறுப்பாகவும், அவர்களின் மூளை வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா? 

சொல்லப் போனால், உங்கள் காலை வழக்கத்தில் தினமும் சில விஷயங்களை சேர்ப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் மூளை திறன் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆம், சத்தான உணவு கொடுப்பது முதல் நீங்கள் செயல்படும் விதம் வரை என அனைத்தும் உங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் வளரும் திறனை அதிகரிக்கச் செய்யும். அந்த வகையில், உங்கள் குழந்தைக்கு நாளின் ஆரம்பம் சிறப்பாக இருக்கவும், அவர்களது மூளையின் வளர்ச்சிக்கு உதவவும் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இங்கே.

இதையும் படிங்க: அதிகமாக கோபப்படும் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் சமாளிக்க பெற்றோர் இதை ஃபாலோ பண்ணுங்க.. நச்னு 5 டிப்ஸ்!!

பெற்றோர்கள் தினமும் காலை செய்ய வேண்டிய 5 விஷயங்கள் : 

1. குழந்தையை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள் :

தினமும் காலை உங்கள் குழந்தை எழுந்தவுடன் அவர்களை அன்பாக அனைத்தும் முத்தமிடுங்கள். கூடுதலாக காலை வணக்கத்தையும் சொல்லுங்கள். மேலும், குழந்தையை பள்ளிக்கு வழி அனுப்பும் போதும் கூட, அணைத்து முத்தமிட்டு அனுப்புங்கள் இப்படி நீங்கள் செய்தால் உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், அவர்கள் மீது நீங்கள் மிகவும் அன்பாகவும் இருக்கிறீர்கள் என்று உணருவார்கள். ஒரு குழந்தை எந்தவித கவலையுமின்றி, சந்தோஷத்துடன் நாளை தொடங்கினால் அந்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், படிப்பில் கவனம் செலுத்தவும் இருக்க உதவும்.

2. அவர்களை ஊக்குவியுங்கள் : 

உங்கள் குழந்தை காலை எழுந்தவுடன் அவர்கள் படிக்க விரும்புகிறார்களா அல்லது வேறு ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபட விரும்புகிறார்களா? என்று முதலில் அவர்களிடம் கேளுங்கள். பிறகு அதன்படி அவர்களை ஊக்குவியுங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களது படைப்பாற்றல் தூண்டப்படும் மற்றும் நாளுக்கு நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

3. அவர்களைப் பாராட்டுங்கள் :

காலை உங்களது குழந்தையை ஏதாவது ஒரு விஷயம் செய்தாலோ அல்லது அவர்களது நற்குணங்கள், சாதனைகளை சொல்லி அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களின் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, நாள் முழுவதும் சிறந்த முயற்சிக்கு அவர்களை ஊக்குவிக்கும்.

இதையும் படிங்க:  பெற்றோர்களே.. உங்க குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க சூப்பரான டிப்ஸ்!!

4. ஆரோக்கியமான உணவை கொடுங்கள் : 

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க, தினமும் காலை ஆரோக்கியமான உணவை அவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். ஸ்மூத்தி, பழங்கள், ஓட்ஸ், நட்ஸ்கள், போன்றவற்றை கொடுக்கலாம். இது அவர்களின் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். 

5. குழந்தையின் கையில் இதயத்தை வரையுங்கள் : 

உங்கள் குழந்தை பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்களது கையில் இதயத்தை வரையுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம், அவர்கள் பள்ளியில் இருந்தாலும் கூட, நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை நினைவூட்டம். அதுமட்டுமின்றி, இது அவர்களுக்கு ஆறுதலையும் உறுதியையும் அளிக்கும் மேலும் அவர்களுடன் நீங்கள் எப்போது இருப்பதை உணர வைக்கும். இந்த உணர்ச்சியானது அவர்களது கற்றல் திறனை அதிகரிக்க செய்யும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios