பெற்றோர்களே.. உங்க குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க சூப்பரான டிப்ஸ்!!
Tooth Decay Cavities for Kids : குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
இப்பதெல்லாம் சிறு குழந்தைகள் மத்தியில் பல் சொத்தை பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவது தான். மேலும், குழந்தைகள் சாக்லேட் சாப்பிட்டாலும் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், பற்களில் சொத்தை பிரச்சனை அதிகமாக ஏற்படும். எனவே, இவற்றை தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை
பற்களை துலக்கும் முறை: குழந்தைகள் ஆரம்பத்திலேயே பல் துலக்க பழகினாலும் அவர்களுக்கு சரியான முறையில் பல் துலக்க கற்றுக் கொடுங்கள் அதுமட்டுமின்றி அவர்கள் சரியாகதான் பல் துலக்குகிறார்கள் என்பதையும் நீங்கள் கண்டிப்பாக கவனிக்கவும்.
சாக்லேட்டை தவிர்க்கவும்: பெற்றோர்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் போன்ற இனிப்பு சேர்ந்த உணவுகளை வாங்கிக் கொடுப்பதை முதலில் தவிருங்கள். அவர்கள் அடம்பிடித்து அழுது கேட்டால் கூட கண்டிப்பாக நோ என்று சொல்லிவிடுங்கள். அதுமட்டுமின்றி பற்கள் மற்றும் அண்ணங்களில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்களை ஒருபோதும் வாங்கி கொடுக்காதீர்கள். இந்த மாதிரியான உணவுகள் தான் குழந்தைகளுக்கு பெரும்பாலும் பிடிக்கும்ம் ஆனால், இவை பற்களில் சேதத்தை உண்டாக்கும்.
இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்க சரியான வயது எது தெரியுமா? பெற்றோர்களே அவசியம் தெரிஞ்சுக்கோங்க
பற்களை சுத்தம் செய்வது: பொதுவாகவே இந்த பழக்கத்தை பெரியவர்கள் கூட செய்வதில்லை. மேலும் இந்த பழக்கத்தை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பல் துலக்கியதும் டங்கினர் வைத்து நாக்கை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அதுபோல, உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாயை நன்கு கொப்பளிக்கவும், மற்றும் பற்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் உணவு துகள்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். ஒருவேளை அப்படி செய்யாமல் இருந்தால் பல்லில் சொத்தை ஏற்படும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. இதுபோன்ற வார்த்தைகளை உங்க குழந்தைகளை பார்த்து சொல்லாதீங்க!!
ஆரோக்கியமான டயர்: ஆரோக்கியமான டயத்தை நீங்கள் மட்டுமின்றி, உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால், அவர்களின் உடல் ஆரோக்கியமும், பல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இதற்கு அதிக அளவு காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, முளைக்கட்டிய பயிர்கள், முட்டையின் வெள்ளக்கரு, வெள்ளரிக்காய் போன்றவற்றையும் நிறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.