பெற்றோர்களே.. இதுபோன்ற வார்த்தைகளை உங்க குழந்தைகளை பார்த்து சொல்லாதீங்க!!
Parenting Tips : ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்கு குழந்தைகளை பார்த்து சொல்லக்கூடாத வார்த்தைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பது, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதற்காக பெற்றோர்கள் எல்லாம் முயற்சிகளையும் செய்கிறார்கள்.
ஆனால், பலமுறை அவர்களை கண்டிக்கிறேன் என்ற பெயரில் சில மோசமான வார்த்தைகளால் அவர்களை திட்டுகிறார்கள். இது குழந்தைகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் சொல்லக்கூடாத அந்த வார்த்தைகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
முட்டாள்: இந்த வார்த்தைகளை பல முறை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்து மிகவும் எளிதாக சொல்லிவிடுவார்கள். ஆனால், இந்த வார்த்தை உங்கள் குழந்தையின் மன உறுதியை விரைவில் குறைக்கும் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கையும் சீர்குலைந்து விடும். எனவே, தவறுதலாக கூட இந்த வார்த்தையை உங்கள் குழந்தையை பார்த்து சொல்லி விடாதீர்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது: பெரும்பாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவார்கள் ஆனால் இது தவறு. நீங்கள் இப்படி உங்கள் குழந்தையை பார்த்து சொல்லு வார்த்தை அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இதை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லும் போது உண்மையில், நான் சிறந்தவள் அல்ல என்று அவர்கள் நம்பி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையும் குறைய தொடர்கிறது. எனவே, தவறுதலாக கூட உங்கள் குழந்தையை மற்றவர்களும் ஒப்பிடாதீர்கள்.
உன்னால் எந்த பயனும் இல்லை: குழந்தைகள் வளரும் போது புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அந்தசமயத்தில் அவர்கள் சரியாக ஏதாவது செய்யவில்லை என்றால் உடனே பெற்றோர்கள், உன்னால் எந்த பயனும் இல்லை என்று அவர்களை திட்டி விடுகிறார்கள். ஆனால், குழந்தைகளிடம் இதுபோன்ற வார்த்தைகளை சொல்லாதீர்கள். இப்படி சொல்லும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்தும். மேலும், உங்கள் குழந்தை மற்றவர்கள் முன் தாழ்ந்தவராக உணர்வார்கள்.
சாபம் விடுவது அல்லது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது: உங்கள் குழந்தைகளிடம் இப்படி நடந்து கொள்ளாதீர்கள். இந்த பழக்கத்தை உடனே நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த மாதிரி உங்களுக்கு குழந்தைகளிடம் நடந்து கொண்டால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் மற்றும் தவறான பாதைகளுக்கு கூட செல்ல வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: உங்க குழந்தை பொய் சொல்லுவது தெரிஞ்சா இனி அடிக்காதீங்க.. இப்படி நடத்துங்க!
குறைகளை சொல்லாதீர்கள்: பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். குழந்தை குண்டாகவோ ஒல்லியாகவோ அல்லது ரொம்பவே உயரமாகவோ குள்ளமாகவோ இருப்பதை வைத்து அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதை நிறுத்துங்கள். இதனால் அவர்கள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
இதையும் படிங்க: உங்க குழந்தையை இப்படி பழக்கப்படுத்துங்க.. லைப்ல நல்லா இருப்பாங்க!!