காஞ்சிப்புரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் விதிகள் மீறி செயல்படுவதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து அங்கு வசித்து வந்த முதியவர்களை மீட்டது அரசு.

வில்வராயநல்லூர் இல்லம்

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவரக்ளை பல்வேறு  கருணை இல்லங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில்,இவர்கள் அவைவரையும் மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு  கொண்டு சென்று விட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது

ஆனால் மீண்டும் பாலேஸ்வரம் இல்லத்திற்கு மீண்டும் செல்ல முதியவரால் மறுப்பு  தெரிவித்து உள்ளனர்

ஏன் மீண்டும் பாலேஸ்வரம் இல்லம் செல்ல மறுப்பு தெரிவிக்கின்றீர்கள் என்ற  கேள்விக்கு,பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அடுக்கி உள்ளனர்.அந்த  முதியவர்கள்...அதில்..

தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும்,

சரியான உணவு வழங்குவதில்லை என்றும்...

நோய் வாய்படும் போது சரியான மாத்திரை மருந்துகளும் கிடையாதாம் ....

மொத்தத்தில் சிறை வாசிகள்போல் தான் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்

ஆடைகள் கூட சரியான சுழற்சி முறையில் கிடைப்பதில்லை என பல குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்

ஆனால் தற்போது அரசு அங்கிகாரம் பெற்ற காப்பகத்தில் இருந்து மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு செல்ல மாட்டோம் என அங்கே இருந்து மாவட்ட நிர்வாகத்தினால் மீட்கப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள்.

வில்ராய நல்லூர் இல்லம்

அதில் குறிப்பாக, மதுராந்தகம் பகுதியில் இயங்கி வரும் வில்வராயா நல்லூர் இல்லத்தில்  தங்கி உள்ள முதியவர்கள் பாலேஸ்வரம் கருணை இல்லம் செல்ல தங்களுக்கு  விருப்பமே இல்லை....நாங்கள் இங்கேயே இருக்கிறோம்..எங்களுக்கு எதிராக அரசு எந்த  முடிவும் எடுக்காது என தெரிவித்து உள்ளனர்.

அழைத்து செல்லப்பட்ட 294 முதியவர்களில் 12 பேர் இறந்து விட்டதாக போலீஸ் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது. எஞ்சி உள்ள 282 பேரை மீண்டும் பாலேஸ்வர இல்லத்தில் சேர்க்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது