இவங்க எல்லாம் பாத்ரூம் உள்ள என்னதான் பண்ணுவாங்க; வெளியவே வர மாட்டேன்றாங்க; இதுதான் ரகசியம்!!
Bathroom Usage Statistics : பலர் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு, குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கு மட்டுமல்ல. இதற்குப் பின்னால் பல சுவாரசியமான காரணங்களும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் பிஸியான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் அனைவருக்கும் கொஞ்சம் அமைதி தேவை. ஆகையால், அன்றாட வேலைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நாம் சில தருணங்களில் அமைதியாக கழிக்க அமைதியான இடங்களை தேடுகிறோம். அத்தகைய இடங்களில் ஒன்றுதான் குளியலறை. இது கேட்பதற்கு உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், அது தான் உண்மை. ஆம், குளியலறை நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, சிறிது நேரம் ஓய்வையும் அமைதியையும் கொடுக்கும் ஓர் இடமாகும்.
பொதுவாக நாம் பாத்ரூமில் குளிப்பது, துணி துவைப்பது என முக்கிய விஷயங்களை செய்வது வழக்கம். ஆனால், தற்போது மக்கள் அதை அமைதியான இடமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதற்குப் பின்னால் பல சுவாரசியமான காரணங்களும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: Health Tips : குளித்த உடனே தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..!!
ஆராய்ச்சி சொல்வது இதுதான்:
இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 2000 பேர்களில் 43% நபர்கள் மன அமைதிக்காக தங்களை தனிமைப்படுத்துவதற்காக பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவதை விரும்புகிறார்கள். அதுபோல, 13% பேர் தங்களது துணையை பிரிந்து பாத்ரூமில் அதிக நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதிலும் குறிப்பாக, தற்போது இளைஞர்கள் தான் பாத்ரூமில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி சொல்லுகிறது.
ஆராய்ச்சி படி, ஒரு பிரிட்டிஷ் நபர் ஒவ்வொரு வாரமும் குளியல் அறையில் ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் செலவிடுகிறாராம். அதுவும் குறிப்பாக, பெண்களை விட ஆண்கள் தான் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதாவது ஆண்கள் ஒவ்வொரு வாரமும் சராசரியாக சுமார் 2 மணி நேரம், பெண்கள் ஒரு மணி நேரம் 42 நிமிடங்களும் பாத்ரூமில் செலவிருகிறார்கள்.
இதையும் படிங்க: குளிக்கும்போது நீங்க செய்யக்கூடாத பொதுவான தவறுகள்.. மீறினால் இந்த பிரச்சனைகள் வரும்!
பாத்ரூம் அமைதியின் இடம்:
இது குறித்து ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்கான பிரிட்டிஷ் சங்கத்தின் உறுப்பினரான ஜார்ஜினா ஸ்டர்மர் கூறுகையில், இன்றைய நவீன காலத்தில் வாழ்க்கையானது மிகவும் பிஸியாகவும், மன அழுத்தமாகவும் இருப்பதால் அனைவருக்கும் கொஞ்சம் அமைதி தேவை. இதனால்தான் மக்கள் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
ஒருவேளை உங்களுக்கு பாத்ரூமில் சென்ற பிறகும் ரிலாக்ஸ் ஆகவில்லை என்றால் நீங்கள் மூச்சு பயிற்சிகளை செய்து பாருங்கள் என்று அவர் பரிந்துரைத்தார். அதாவது, உங்கள் கைகளை முன்னால் வைத்து ஒரு கையில் ஆள்காட்டி விரல மற்றொரு கையின் விரல்களின் மேல் விரல்களில் மேலும் கீழும் அசைக்கவும். மேல்நோக்கி நகரும் போது மூச்சை உள்ளிழுக்கவும், கீழ்நோக்கி நகரும் போது மூச்சை வெளியேற்றவும். இது உங்களுக்கு நல்ல நிவாரணம் தரும் என்று அவர் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D