Health Tips : குளித்த உடனே தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..!!
குளித்த உடனேயே நாம் செய்யும் சில செயல்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

நாம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிடுவது முதல் குடிப்பது வரை என அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக, உடற்பயிற்சியும் அவசியம். இதனுடன் நாம் தினமும் குளிப்பது நல்லது. ஆனால், குளித்த உடனேயே சில விஷயங்களைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..?
ஆம், பொதுவாகவே சப்பிட்ட உடனே குளிக்கக் கூடாது என்று பெரியவர்கள் செல்வதை கேள்விப்பட்டு இருப்போம். அதே போல, குளித்த பிறகு சில விஷயங்களையும் செய்யக் கூடாதாம். மீறினால், பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே, குளித்த பிறகு என்ன செய்யக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
தண்ணீர் குடிக்க வேண்டாம்: குளித்த உடனே சிலருக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், அது தவறு. ஏனெனில், குளிக்கும் போது நமது உடலின் வெப்பநிலையும், இரத்த ஓட்டமும் வித்தியாசமாக இருப்பதால், குளித்த உடனேயே தண்ணீர் குடித்தால், உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
ஹேர் ட்ரையர்: சிலர் குளித்துவிட்டு வந்த உடனே ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படி செய்தால், முடியின் மென்மைத்தன்மை மறைந்து, முடி அதிகமாக வறண்டு, பின்னர் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இதையும் படிங்க: குளிக்கும்போது "இந்த" 5 உடல் உறுப்புகளை சுத்தம் செய்யாவிட்டால் ஆபத்து..!
சருமத்தை தேய்க்க வேண்டாம்: குளித்துவிட்டு வந்த பிறகு உங்கள் சருமத்தை வலுவாக தேய்க்கும் பழக்கம் இருந்தால் உடனே கை விடுங்கள். காரணம், இதனால் சருமத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இதனால் சருமம் வறண்டு, தோல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: RO வேஸ்ட் வாட்டரில் குளிக்கலாமா? தெரிஞ்சிக்க படிங்க ஆனா 'ஷாக்' ஆகாம படிங்க..!!
வெயிலில் செல்லாதீர்கள்: நீங்கள் குளித்த உடனேயே வெயிலில் ஒருபோதும் செல்லாதீர்கள். ஏனெனில், சூரிய ஒளி காரணமாக உடல் சூடுபிடிக்கும் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குளித்த உடனேயே இந்த தவறை செய்யாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D