NEW LIFE STYLE IN TAMILNADU SONN SOME CHANGES WILL BE HAPPEN
தமிழகத்தில் வரப்போகும் "புது லைப்ஸ்டைல்"...! அரசு பள்ளியில் இனி இவர்களும்....
தமிழகத்தில் அரசியலில் மட்டுமில்லை,கல்வி முறையிலும் பல குழப்பங்கள் உள்ளது.அதாவது போட்டி தேர்வுகளை சமாளிக்க முடியாமல் போகும் அளவிற்கு சரியான பாடத்திட்டங்கள் இல்லாததே காரணமாக கூறப் படுகிறது.
இந்நிலையில்,அடுத்த ஆண்டு பாட திட்டத்தில் பல மாற்றத்தை கொண்டுவந்து, மாணவர்கள் எந்த ஒரு போட்டி தேர்வியில் எளிதில் கையாளும் விதமாகவும், போட்டிதேர்வை போட்டி போட்டுக்கொண்டு சமாளிக்கும் திறமை மிக்கவர்களாகவும் வருவார்கள் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
ஆனால், இதில் என்ன ஒரு முக்கியமான விஷியம் என்றால்,10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ரேங்கு முறை ரத்து செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போட்டி தேர்வுகளை சமாளிக்க தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்களை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற பல மாற்றங்கள் வர உள்ளதால், இனி வரும் காலங்களில்,வரும் கல்வியாண்டில்அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
அதாவது கல்விமுறையில் மட்டும் மாற்றம் இல்லாமல், அந்த மாற்றத்தால் மக்களின் மனநிலை மாறி, அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
