குடி குடியை கெடுத்தது..! எலி மருந்தை அருந்திய மனைவி மகள்..! பிறகு நடந்து என்ன..?  

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பெயர் பிரேமா டெய்லரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சரோஜா என்ற மகளும் உள்ளார். மகளுக்கு தற்போது 17 வயது ஆகிறது.

ரமேஷுக்கு குடிபழக்கம் இருப்பதால் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கமாக வைத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரேமாவை அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார். இதில் மிகுந்த மனவேதனை அடைந்த பிரேமா வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து அருந்தினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியான மகள் சரோஜாவும் அவரிடம் இருந்த எலி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டார். இதில் இரண்டு பேரும் மயங்கி கீழே விழுந்ததை பார்த்து ரமேஷ் அதிர்ச்சியில் அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடியர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.