வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ளது இந்திரா நகர்.

இங்கு வசிக்கும் ஜானகிராமன் என்பவர் வீட்டில் 100 அதிகமான  பாம்புக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது

இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவர் வீட்டில் 100 கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

ஜானகிராமன் வீட்டின் அருகே பாம்புக்குட்டிகள்  அதிகமாக  இருப்பதாக தீயணைப்பு துறைக்கு வந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் முட்டையிட்டு குஞ்சி பொறிந்திருந்த இருந்த சுமார் 100 சாரபாம்பு குட்டிகளை இரண்டு மணி நேரம் போராடி பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்புகளை வனத்துறையினர் காட்டுபகுதிக்குள் எடுத்து சென்று விட்டனர். இதனால் இந்திராநகர் பகுதி பொதுமக்கள் பாம்பின் அச்சத்தில் உள்ளனர். 


ஒரே நேரத்தில் இவ்வளவு பாம்புகள் வீட்டிற்குள் வந்தது எப்படி? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

மேலும் வேறு யாராவது வீட்டில், இது போன்று  பாம்பு  குட்டிகள் இருகின்றனவா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் குடியாத்தத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது