பச்சை இலை காய்கறிகளை சமைக்கும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கீரைகள், ப்ராக்கோலி, காலே, காலிபிளவர் முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சுவையானது மட்டுமல்ல, ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. ஆனால் இவற்றை நாம் சமைக்கும் போது சில பொதுவான தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகளின் அளவுகள் குறைந்துவிடும். இந்த பதிவில் பச்சை இலை காய்கறிகளை சமைக்கும்போது நாம் செய்யும் சில தவறுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பச்சை இலை காய்கறிகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் :
- நீண்ட நேரம் சமைப்பது :
நம்மில் பலரும் இந்த தவறை செய்கிறோம். பச்சை காய்கறிகளை நீண்ட நேரம் சமைத்தால் அதன் நிறம், அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் பாதிக்கப்படும். பச்சை இலை காய்கறிகளை பொருத்தவரை சிறிது நேரம் சமைப்பது தான் போதுமானதாக கருதப்படுகிறது.
2. Blanching செய்யாமல் இருப்பது :
இந்த முறையை பலரும் மறைக்கிறார்கள். Blanching என்றால், சூடான நீரில் பச்சிலை காய்கறிகளில் சில நிமிடங்கள் போட்டி எடுப்பதாகும். எப்படி செய்வதன் மூலம் அவற்றின் நிறம், அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். மேலும் அவற்றின் புத்துணர்ச்சியை பாதுகாக்கவும் உதவுகிறது.
3. அதிகமாக தண்ணீர் சேர்த்தல் :
பச்சை இலை காய்கறிகளை வேக வைக்கும் போது பலர் அதிகமாக தண்ணீர் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் இப்படி செய்தால் அதன் ஊட்டச்சத்து இழக்கப்படும், சுவை மாறும். ஆகையால் எப்போதுமே குறைந்த அளவில் தண்ணீர் பயன்படுத்தி, பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கவும். இதனால் அவற்றின் அமைப்பு, நிறம், சுவை அப்படியே இருக்கும்.
4. அதிகமான காய்கறிகளை சேர்ப்பது :
சிலர் ஒரே நேரத்தில் எல்லா காய்கறிகளையும் சமைப்பார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு. இதனால் காய்கறிகள் ஒழுங்காக வேகாமல் போகும். இதை தவிர்க்க காய்கறிகளை சின்ன சின்னதாக நறுக்கி சமைக்கவும் அல்லது பெரிய பாத்திரத்தை பயன்படுத்துங்கள்.
5. மசாலாக்களை பயன்படுத்தாமல் இருப்பது :
சிலர் பச்சை இலை காய்கறிகளை சமைக்கும் போது மசாலாக்களை சேர்க்க மாட்டார்கள். இதனால் அவற்றில் சுவை இருக்காது. ஆனால் பச்சை இலை காய்கறிகளின் சுவையை மேம்படுத்த சில மசாலா பொருட்களை சேர்ப்பது மிகவும் அவசியம். இதற்கு இஞ்சி, பூண்டு, மூலிகைகள், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவை உணவுக்கு சுவையையும் புதிய வடிவத்தையும் கொடுக்கும்.
6. காய்கறிகளை வெட்டுவது :
காய்கறிகளை முன்கூட்டியே வெட்டி வைப்பது நேரத்தை மிச்சப்படுத்தும் என்றாலும், அதன் ஊட்டச்சத்துக்களும் இழப்பதற்கு வாய்ப்பு உள்ளன. எனவே பச்சை இலை காய்கறிகளை சின்ன சின்ன துண்டாக நறுக்காமல் சமைக்க பழகிக் கொள்ளுங்கள் .ஒருவேளை அப்படி நறுக்கி சமைத்தாலும் உடனே அதை சமைத்து விடுங்கள். நீண்ட நேரம் வைக்க வேண்டாம்.
7. எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது:
சிலர் பச்சை இலை காய்கறிகளுக்கு எண்ணெய் சேர்க்காமல் சமைக்கிறார்கள். ஆனால் அது தவறாகும். சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்யில் அவற்றை சமைத்தால் அதன் அமைப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுவை மேம்படும்.
8. கழுவாமல் இருப்பது :
இந்த தவறை பலரும் செய்கிறார்கள். அதாவது பச்சிலை காய்கறிகளை சமைக்கும் முன் தண்ணீரில் கழுவாமல் இருப்பது. ஆனால் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். ஏனெனில் அவற்றில் கிருமிகள் ஒட்டி இருக்கும். ஆகவே நன்றாக கழுவி விட்டு பிறகு சமைப்பது தான் நல்லது.
