Asianet News TamilAsianet News Tamil

அதிக தீயில் வைத்து பாலை கொதிக்க வைக்கிங்களா? இனி இந்த தப்ப செய்யாதீங்க..!!

மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சுவதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..

milk cooking tips know how to boil milk in tamil mks
Author
First Published Sep 21, 2023, 11:31 AM IST

நம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் காலையில் சமையலறை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த சமயத்தில் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நம்முடைய அம்மாக்கள் பாலை விரைவாக கொதிக்க வைப்பதற்காக அதிக தீயில் வைத்து பாலை சூடு படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அது பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பை குறைக்கும்.

பாலை விரைவாக கொதிக்கக்கூடாது என்பதற்கான காரணம்:
பாலை நாம் மிக விரைவாக கொதிக்க வைப்பதால், அவை சர்க்கரையை எரித்து, மோர் புரதத்தை திரளச் செய்யுமாம். இதனால் பாத்திரத்தின் அடிப்பகுதியில் பால் பிடித்து விடும். மேலும் நீங்கள் 
அதிக தீயில் வைத்து பால் காய்ச்சும் போது பால் பொங்கி உங்கள் அடுப்பை அழுக்காக்கி விடுகிறது. ஆகையால் பாலை மிதமான தீயில் மெதுவாக சூடாக்க வேண்டும். குறிப்பாக பாலில் கொதி வரும் போது அதனை கண்டிப்பாக கிளற வேண்டும். மேலும் பால் கொதிக்கும் போது,   அதில் இருக்கும் நீர் ஆவியாக மாறுகிறது. அதுமட்டுமல்லாமல், பாலில் இருக்கும், கொழுப்புகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பிற கலவைகள் பிரியத் தொடங்குகிறது.

இதையும் படிங்க:  அடிப்பிடித்த பால் பாத்திரத்தை கழுவி சோர்வாக இருக்கிறீர்களா? தக்காளி வைத்து சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்..!!

பாலை கிளறுவதற்கான காரணம்:
பாலை நாம் மிதமான தீயில் வைத்து கிளறும் போது அதில் இருக்கும் நீர் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை ஒன்றாக வைக்க உதவுகிறது. பொதுவாகவே நாம் அதிக தீயில் வைத்து எந்த உணவையும் சமைக்கும் போது அதில் இருக்கும் சில வகையான சத்துக்களை இழக்கிறோம். இது பாலுக்கும் பொருந்தும் என்பதால்தான் நாம் குறைந்த தீயில் வைத்து பாலை காய்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

பால்: 
ஒரு முழுமையான உணவு என்றால் அது பால் என்று நாம் அனைவரும் அறிந்ததே. பாலில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உள்ளது. அதுமட்டுமன்றி, இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. மேலும் இது மேக்ரோஸின் ஆரோக்கியமான கலவை ஆகும். பாலை கொதிக்க வைப்பதால்,அதிலிருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் கொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  யாரெல்லாம் அதிகம் பால் குடிப்பீங்க... ஜாக்கிரதை..! ஷாக் ஆகாம இதை படிங்க...அப்புறம் உங்களுகே புரியும்..!!

பால் கொதிக்கும் போது தீயை எப்போது அணைக்க வேண்டும்?
நீங்கள் பால் காய்ச்சும் போது உங்கள் பாத்திரத்தின் விளிம்பை சுற்றி நீர்க்குமிழிகள் உருவாகும். அச்சமயத்தில் தீயை அணைக்கலாம். பொதுவாகவே நீங்கள் பாலு அதிகமாக சூடாக்கும் போது அதில் இருக்கும் புரதம் குறைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல் பாலின் நிறமும் சுவையும் மாறும். மேலும் பாலில் பாலாடை வருவதை தடுக்க விரும்பினால் பால் நன்கு குளிர்ந்த பின் அதனை கிளற வேண்டும். ஆகையால் நீங்கள் எப்போதும் குறைந்த தீயில் வைத்து பாலை காய்ச்சுவது நல்லது இதனால் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios