அடிப்பிடித்த பால் பாத்திரத்தை கழுவி சோர்வாக இருக்கிறீர்களா? தக்காளி வைத்து சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்..!!
உங்கள் பால் கொதிக்கும் போது, பாத்திரம் அடிக்கடி அடிபிடிக்குதா? அவற்றை சுத்தம் செய்வதை எளிதாக்கும் சில சூப்பர் ஹேக்குகள் இங்கே உள்ளன...
பொதுவாக பால் பாத்திரம் அடுப்பில் நீண்ட நேரம் இருக்கும் போது அல்லது அடுப்பின் தீ அதிகமாக இருக்கும் போது பாத்திரம் அடிபிடிக்கும். பாத்திரம் கடுமையாக அடிபிடித்தால் அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினம். மேலும் எரிந்த பால் பாத்திரத்தை சுத்தம் செய்வது அல்லது கறையை அகற்றுவதற்கு சில தந்திரங்கள் அவசியமாக்குகிறது. இதன் விளைவாக, எரிந்த பால் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான சில புதிரான முறைகளை குறித்து இங்கே பார்க்கலாம்.
தக்காளி: உங்கள் பால் பாத்திரம் அடி பிடித்து இருந்தால் தக்காளியை கொண்டு ஈசியாக சுத்தம் செய்யலாம் தெரியுமா? அதற்கு முதலில் அடிபிடித்த பால் பாத்திரத்தில் தக்காளி சாஸினை ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின் காலை எழுந்ததும் ஊர வைத்த பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
இதையும் படிங்க: பூஜை பாத்திரங்கள் 10 நிமிடத்தில் பளபளன்னு ஜொலிக்க இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க..!!
வினிகர்: அடிபிடித்த பால் பாத்திரத்தை வினிகர் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஏனெனில் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் பாத்திரத்தில் உள்ள பால் கறையை அகற்றுவதற்கு ஏற்றதாக அமைகிறது. அதற்கு முதலில், அடிபிடித்த பால் பாத்திரத்தில் மூன்று முதல் நான்கு சொட்டு வினிகரைச் சேர்க்கவும், எரிந்த துகள்கள் கறைகள் தளர்த்தப்படும் வரை காத்திருக்கவும், இப்போது உங்கள் பால் பாத்திரத்தை எப்போது போல கழுவலாம். இவ்வாறு செய்தால் உங்கள் பால் பாத்திரம் பளிச்சென்று மாறும்.
உப்பு: உப்பு ஒவ்வொரு உணவுக்கும் சுவையாக இருக்க வேண்டிய பொருட்களில் ஒன்று. குப்பைக் கொண்டு அடிப்பிடித்த பால் பாத்திரத்தையும் சுத்தம் செய்யலாம் அதற்கு முதலில் எரிந்த பால் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு, கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்க்க வேண்டும். எரிந்த கறை படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். பின் நீங்கள் எப்போதும் கழுவுவது போல பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது லிக்விட் பயன்படுத்தி பாத்திரத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் உங்கள் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
பேக்கிங் சோடா: அடி பிடித்த பால் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடா மிகவும் உதவுகிறது. இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி பாத்திரத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். பின் எலுமிச்சை நீரில் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து, எப்போதும் போல பாத்திரத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பாத்திரம் புதிதாகக் காணப்படும்.
இதையும் படிங்க: இரும்பு தவாவை சுத்தம் செய்ய சமையலின் இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்..!!
எலுமிச்சை சாறு: எரிந்த உங்கள் பாத்திரத்தின் பிரகாசமாக்க எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படலாம். இதற்கு முதலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து அதை அடிபிடித்த பாத்திரம் முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பின் எப்போதும் போல பாத்திரம் கழுவும் லிக்விட் பயன்படுத்தி கழுவ வேண்டும்.