Asianet News TamilAsianet News Tamil

பூஜை பாத்திரங்கள் 10 நிமிடத்தில் பளபளன்னு ஜொலிக்க இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க..!!

உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை பத்து நிமிடத்தில் எப்படி பளபளப்பாக சுத்தம் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

pooja vessels cleaning tips in tamil
Author
First Published Aug 14, 2023, 3:10 PM IST

பொதுவாகவே நாம் பூஜை பாத்திரங்களை பித்தளை அல்லது செம்பில் பயன்படுத்துகிறோம். பூஜை பாத்திரங்களை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில்  சிரமம் உங்களுக்கு தான். பூஜை பாத்திரங்கள் நிறைய இருப்பதால் அதை சுத்தம் செய்வதற்கு என நேரம் ஒதுக்க வேண்டியது இருக்கும். நீங்கள் சிரமப்படாமல் அவற்றை பத்து நிமிடத்திற்குள் சுத்தம் செய்து  பளபளன்னு ஜொலிக்க செய்யலாம். அதை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம். 

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான வழிகள்:
முதலில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் சேர்த்துக்கொள்ளளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதை கொஞ்சம் ஆறவைக்க வேண்டும். பின் ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பூஜை பாத்திரங்களையும் வைத்து அந்த தண்ணீர் ஊற்றி வேண்டும். அதில் நீங்கள் புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். அதனை அப்படியே விட்டு விடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும் இந்த பாத்திரத்தில் இருக்கும் பூஜை பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுகள். 

இதையும் படிங்க:  உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா..இதை ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தினாலே போதும்

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் அரிசி மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் டூத் பேஸ்ட் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்வீட் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பூஜை பாத்திரம் ஒவ்வொன்றிலும் தேய்த்து ஊற வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவி பார்க்கும்போது அவை பளபளப்பாக இருக்கும். எனவே, நீங்களும் ஒஒருமுறை உங்க வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை இப்படி கழுவி பாருங்கள் பாத்திரம் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios