marraige is just for fun and easily getting divorce

பந்தாவிற்கு "காதல்"...."ஸ்டைலுக்கு கல்யாணம்"... மாறிவரும் கலாச்சாராம்

காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில்..எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் காதல் மலர்ந்திருக்கும். அவ்வாறு மலரும் காதல் திருமணத்தில் தான் முடிகிறது என்றால் அதை விட சந்தோசம் வேறு ஏதும் கிடையாது என்றே கூறலாம்.

அப்படி திருமணத்தில் முடிந்த காதல், நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தல், அதை விட பெரிய வெற்றி இந்த உலகில் இருக்குமா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் குடும்ப வாழ்க்கை என்பது அனுபவித்து வாழ வேண்டியது. அவசியத்திற்காக அவசரமாக வாழ வேண்டியது இல்லை அல்லவா?

"கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்" என்பதெல்லாம் மலை ஏறி சென்றுவிட்டதோ என நினைக்கும் அளவிற்கு தான் இன்றைய இளசுகளின் திருமண வாழ்க்கை நகர்கிறது.

கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று அப்படி உள்ளதா ?

பந்தாவுக்காக காதல்

நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவரவர் தகுதிக்கேற்ப தன் துணையை தேர்வு செய்து, காதல் வயப்பட்டு ,எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று ஆடி பாடி என ஆனந்த தாண்டவமே நடத்தி இருப்பர். ஆனால் அதே இருவர் திருமணம் செய்துக் கொண்ட பின், அனைத்துமே கசக்க தொடங்கி இருக்கும். ஏனென்றால் அவர்கள் பார்க்காதது ஏதும் இருக்காது.

செலவுகள் கோடி

திருமண ஏற்பாடுகளுக்கு பஞ்சமே இருக்காது...ஆடல் என்ன ..பாடல் என்ன... எந்த குறையும் இருக்காது. வாழ்கையில் ஒரே ஒரு முறை தான் இந்த மாதிரி திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்பதற்காக கோலாகாலமாக மாறி இருக்கும் திருமண மண்டபம்.இதற்காக அவர்கள் செய்யும் செலவோ லட்ச கணக்கிலோ அல்லது கோடியில் தான் இருக்கும்

ஸ்டைலுக்காக கல்யாணம்

காதல் முதல் கல்யாணம் வரை இனிக்கும் காதல், கல்யாணத்திற்கு பிறகு கசக்கிறது அல்லவா...அதோடு நிற்கிறதா என்ன ? இங்குதான் ஆரம்பிக்கும் பிரச்னை. என்ன தெரியுமா ? எந்த செயல் செய்தாலும் அதில் குறை சொல்வதிலிருந்து ....சந்தேகம், இழிவாக பேசுதல், அவரவர் குடும்பத்தை இழுத்து வைத்து அசிங்கப்படுத்துதல், நீயா நானா என சண்டை ஆரம்பித்தல்...பின்னர் டைவர்ஸ்...இவ்ளோ தான் வாழ்க்கை........

மொத்தத்தில் தற்போது ஆண்கள் திருமணம் செய்துக்கொள்வதற்கு பெண் கிடைப்பதில் பல சிரமம் இருக்கிறது என்று கூறி வந்தாலும், அவ்வாறு கிடைக்கும் பெண்ணுடன் கண்டிப்பாகா நிம்மதியான வாழ்கை வாழ முடியுமா என்று யாராலும் உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.....

மொத்தத்தில் பந்தாவிற்கு "காதல்"...."ஸ்டைலுக்கு கல்யாணம்"... என மாறிவருகிறது கலாச்சாராம்