உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தற்போது பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்துகிறார்.

அப்போது.

"வரும் வாரங்களில் தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்... முடிந்தவரை வேலையையும் வர்த்தகத்தையும் வீட்டிலிருந்தவாறே நடத்திக் கொள்ளுங்கள்

"மக்கள் ஊரடங்கு"

மார்ச் 22ஆம் தேதி யாரும் வெளியில் வர வேண்டாம். "மக்கள் ஊரடங்கு" என்ற நடைமுறையை பின்பற்றுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.

அத்தியாவசிய பணிகளை செய்பவர்களுக்கு மட்டும் அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கலாம்.நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கினை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். இந்த மக்கள் ஊரடங்கு வருங்காலத்தில் பல பிரச்சினைகளை சமாளிக்க உதவிகரமாக இருக்கும். 

மாநில அரசுகள் மற்றும் அனைத்து சங்கங்கள் உள்ளிட்டோர் இதுகுறித்த விழிப்புணர்வை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும். குறைந்தது ஒரு நபர் மற்றொரு நபரிடம் இந்த தகவலை சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.