Asianet News TamilAsianet News Tamil

மதுரை மாவட்ட கலெக்டரை அலறவிட்ட ' தீ 'குளிப்பு சம்பவங்கள்.!!

மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும்,நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் மனவிரக்தியில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்க வந்த இருவா், பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி ,அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Madurai District Collector screams 'Fire'
Author
Madurai, First Published Mar 17, 2020, 7:57 AM IST

T.balamurukan

மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும்,நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் மனவிரக்தியில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்க வந்த இருவா், பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி ,அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கரிசகாலாம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). வாடகை வாகன ஓட்டுநராக வேலை செய்து வரும் இவா், தனது வீட்டுமனைக்கு பட்டா வழங்கக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பட்டா சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் வேண்டும் என கிராம உதவியாளா் கேட்டதாகத் தெரிகிறது.

Madurai District Collector screams 'Fire'

இது குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மணிகண்டன் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். பட்டா வழங்காமல் இழுத்தடித்துள்ளனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக  வந்த அவா், தண்ணீா் பாட்டிலில் கொண்டு வந்திருந்த டீசலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் செய்தியாளா்கள் ஓடிச் சென்று அவரைத் தடுத்து நிறுத்தினர்.

இதேபோல், மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது மீட்கப்பட்டார்.இவா், ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊருணி, கண்மாய்களை மீட்கக் கோரி 5 கலெக்டர்களிடம் புகார் அளித்தும், நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும் தீக்குளிக்க முயன்றதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

Madurai District Collector screams 'Fire'

இந்த இருவரையும் தல்லாகுளம் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைக்குப் பின்னா் எச்சரித்து அனுப்பி வைத்தனா். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதற்காகவே 3மூன்று கேட்கள் அடைக்கப்பட்டுள்ளது.போலீசாரின் அசலாட் தனத்தால் அடுத்தடுத்து தீக்குளிப்பு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios