திருமணம் செய்யலாமா? பன்றிக்கறி சாப்பிடணும்; லீப் ஆண்டின் வினோத நம்பிக்கைகள்!

பிப்ரவரி 29ஆம் நாளில் பல நாடுகளில் சில வினோதமான வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. எந்தெந்த நாடுகளில் என்னென்ன செய்கிறார்கள் என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

leap year traditions and superstitions from around the world sgb

இந்த 2024ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு! சில கலாச்சாரங்களில், லீப் ஆண்டுகள் துரதிர்ஷ்டமானவை என்று கருதப்படுகின்றன. அதிர்ஷ்டத்தைக் கொண்டுவர பிப்ரவரி 29ஆம் நாளில் சில வினோதமான வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. லீப் ஆண்டில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன செய்கிறார்கள் என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

பிரிட்டன்:

பிரிட்டனில் பிப்ரவரி 29ஆம் நாள் பெண்கள் தங்கள் காதலனிடம் காதலைச் சொல்ல ஏற்ற நாள் என்று நம்பப்படுகிறது. காதலை ஆண்கள் தான் முதலில் சொல்ல வேண்டும் என்ற கருத்து காலாவதியாகும் வகையில் இந்த வழக்கம் இருக்கிறது. பல பெண்கள் பிப்ரவரி 29ஆம் தேதி தங்கள் பிரியத்திற்குரிய நபரிடம் காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

அயர்லாந்து:

அயர்லாந்தில் லீப் ஆண்டின் பிப்ரவரி 29ஆம் தேதி பேச்சுலர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 29ஆம் தேதி காதலை மறுத்தால் அந்தப் பெண்ணின் ஏமாற்றத்தை ஈடுசெய்ய ஏதாவது ஒரு பரிசு வழங்க வேண்டும். பொதுவாக, கையுறைகள், பட்டு கவுன், ஃபர் கோட் போன்ற பொருட்களை பரிசாக வழங்குவார்கள்.

செவ்வாய்க் கிரகத்தில் மறைந்திருக்கும் பெருங்கடல்! மனித குடியேற்றம் சாத்தியமா?

ஸ்காட்லாந்து:

ஸ்காட்லாந்தில் லீப் தினத்தில் பெண்கள் தங்கள் காதலை பிரபோஸ் செய்யும்போது சிவப்பு ஆடை அணிய வேண்டுமாம். ஸ்காட்லாந்திலும் அயர்லாந்தைப் போல லீப் நாளில் காதலை மறுத்தால் ஒரு பரிசைக் கொடுக்க வேண்டும். இது 1288ஆம் ஆண்டில் ராணி மார்கரெட் காலத்தில் இருந்து வழக்கத்தில் உள்ளதாம்.

டென்மார்க்:

டென்மார்க் பாரம்பரியத்தில் லீப் நாளில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் காதலை மறுத்தால், அந்தப் பெண்ணின் மோதிரமற்ற விரல்களை மறைக்க பன்னிரண்டு ஜோடி கையுறைகளைக் கொடுக்க வேண்டும். பின்லாந்தில், ஸ்கர்ட் தைக்ககும் துணியை பரிசளிக்க வேண்டும்.

ஜெர்மனி:

ஜெர்மனியில் மே 1ஆம் தேதி ஆண்கள் தங்களுக்குப் பிரியமான பெண்ணின் மீது தங்கள் காதலை வெளிப்படுத்த, தங்கள் வீட்டின் முன் ஒரு பிர்ச் மரத்தை ரிப்பன்களால் அலங்கரிப்பார்கள். லீப் நாளில் பெண்கள் இதேபோல தங்கள் காதலர் / கணவர் மீது அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பிரான்ஸ்:

பிரான்சில், ஒரு செய்தித்தாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை - பிப்ரவரி 29ஆம் தேதி மட்டும் வெளிவருகிறது. La Bougie du Sapeur எனப்படும் எந்த செய்தித்தாள் ஒரு பழைய பிரெஞ்சு காமிக் பாத்திரத்தின் பெயரைக் கொண்டது. 1980 முதல் பிப்ரவரி 29ஆம் தேதிகளில் வெளியாகும் இந்த செய்தித்தாள் மிகவும் பிரபலமாக உள்ளது. மிக அதிகமாக விற்பனையும் ஆகிறது.

தைவான்:

தைவானில் லீப் ஆண்டு வயதானவர்களுக்கு துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. பிப்ரவரி 29ஆம் தேதியில் திருமணமான மகள்கள் தங்கள் பெற்றோருக்கு பன்றிக்கறி சமைத்துக் கொடுக்க பிறந்த வீட்டுக்குத் திரும்புவார்கள். இந்த உணவு வயதான பெற்றோருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.

கிரீஸ்:

கிரீஸ் நாட்டில் ஒரு லீப் ஆண்டில் திருமணம் செய்துகொள்வதையோ அல்லது விவாகரத்து செய்வதையோ தவிர்க்கிறார்கள். ஒரு லீப் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் விவாகரத்து செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்புகிறார்கள். அதேபோல லீப் ஆண்டில் விவாகரத்து செய்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

KYC, KYC எல்லா பேங்க்லயும் இதுதான் சொல்றாங்க... அப்படின்னா என்ன? தெரிஞ்சுக்கோங்க!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios