மறந்து கூட பெண்கள் சில விஷயங்களை வாழ்க்கையில் செய்திடக் கூடாது என நம் முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி விட்டு சென்றுள்ளனர். அதன்படி சில முக்கிய விஷயங்களை இங்கு பார்க்கலாம். 

இரண்டு கைகளால் தலையை சொறியக்கூடாது. அடிக்கடி வீட்டில் அழவே கூடாது இது பீடையை ஏற்படுத்தும் என்பார்கள். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை உருவாகும்.

ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து மற்றொரு இலைக்கு வைப்பது நல்லது கிடையாது. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் என்னவென்றால் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது என்பதே.

மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது. கைகளால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக்கூடாது.

வீட்டில் ஒரு பொருள் இல்லை என்றால் அதை கணவரிடமோ அல்லது சகோதரரிடமோ தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இந்த பொருள் வேண்டும் என கூறி வாங்கிவரச் சொல்வது மிகவும் சிறந்தது. மேற்குறிப்பிட்ட சில விஷயங்களை கவனமாக உள்வாங்கி கடைபிடிப்பது ஆக சிறந்தது என பெரியவர்கள் தெரிவித்து உள்ளனர்