எலுமிச்சை சூப்பரா சுத்தம் செய்யும் தான்.. ஆனா இந்த 5 பொருட்களில் மட்டும் யூஸ் பண்ணாதீங்க..!

Kitchen Hacks : எலுமிச்சை பழம் சமையல் செய்வதற்கு மட்டுமின்றி, சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவற்றைக் கொண்டு சில இடங்களை சுத்தம் செய்யக்கூடாது. அதுவும் குறிப்பாக சமையல் அறையில்.

kitchen hacks these things in your kitchen you should never clean with lemon in tamil mks

பொதுவாகவே, எல்லோருடைய வீடுகளிலும் கண்டிப்பாக எலுமிச்சை பழம் இருக்கும். எலுமிச்சை பழத்தின் சிறப்பு என்னவென்றால், அது சமையலுக்கு மட்டுமின்றி, பல வகையான பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பிடிவாதமான கறைகளையும் இது எளிதாக அகற்றிவிடும். அதுமட்டுமின்றி இதிலிருந்து வரும் வாசனையானது தனித்துவமானது. இருந்த போதிலும், எலுமிச்சை பழத்தை சில இடங்களில் சுத்தம் செய்ய பயன்படுத்தவே கூடாது. அதுவும் குறிப்பாக, சமையலறையில் தான்.. இது குறித்து விரிவாக இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சை பழத்தை இங்கு பயன்படுத்தக் கூடாது:

1. கிச்சன் கவுண்டர் டாப்:
பலர் தங்களது கிச்சன் கவுண்டர் டாப்பை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படி செய்வது தவறு. ஏனெனில், பளிங்கு, கிரானைட்,சுண்ணாம்பு போன்ற இயற்கை கல்லால் தான் கிச்சன் கவுண்டர் டாபில் போடப்பட்டிருக்கும். இதில் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தினால், எலுமிச்சையில் உள்ள அமிலம் இந்த கற்களின் மேற்பரப்பை அரித்துவிடும் மற்றும் காலப்போக்கில் அதன் நிறமும் மாறி, அதில் விரிசல் ஏற்பட்டு விடும். எலுமிச்சுக்கு பதிலாக, நீங்கள் அந்த கற்களின் அழகை பாதுகாக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ph நடுநிலை கிளீனரைப்  பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க:   உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!

2. நான் ஸ்டிக் பாத்திரங்கள்: 
நான் ஸ்டிக்கில் எலுமிச்சை பயன்படுத்தினாலும், அது அதன் செயல் திறனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, முடிவில் அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு மாற்றுகிறது. எனவே, நான் ஸ்டிக்கை சுத்தம் செய்ய மென்மையான கிளீனரை பயன்படுத்துங்கள். இது அவற்றின் செயல்பாட்டை பராமரிக்கவும், சேதத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க:  செம்பு பாத்திரம் பளபளக்க இந்த பொருட்களே போதும்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

3. எஃகு உபகரணங்கள்:
துருப்பிடிக்காத எஃகு உபகரணங்களில் எலுமிச்சையை பயன்படுத்தினால், அதன் மீது புள்ளிகள் மற்றும் கறைகள் ஆங்காங்கே படிந்து விடும். அதற்கு பதிலாக அவற்றை சுத்தம் செய்ய ஒரு கிளீனரை பயன்படுத்துங்கள். மேலும், அவற்றின் பளபளப்பை சேதப்படுத்தாமல் இருக்க, ஒரு மைக்ரோஃபைபர் துணையின் உதவியுடன் தண்ணீர் மற்றும் லேசான டிஷ் சோப்பால், எஃகு உபகரணங்களை சுத்தம் செய்யுங்கள்.

4. பித்தளை, தாமிரம், அலுமினியம்:
பித்தரை, தாமிரம், அலுமினியம் ஆகியவற்றை சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால், எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை இவற்றை அழித்துவிடும். எனவே, இவற்றை சுத்தம் செய்ய பாலிஷ் செய்வதற்கு ஏற்ற உலோக கிளீனர்கள் அல்லது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

5. எலக்ட்ரானிக் கெட்டில்கள்:
எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை எலக்ட்ரானிக் கெட்டில்களை சேதப்படுத்திவிடும். எனவே, இதை சுத்தம் செய்ய ஒருபோதும் எலுமிச்சை பழத்தை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக டெஸ்கேலிங் ஏஜெண்டுகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios