- Home
- Gallery
- உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!
உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!
உங்கள் பிரிட்ஜ் எப்போதுமே சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க இந்த குறிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள்..

இப்போதெல்லாம் பிரிட்ஜ் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. எல்லாருடைய வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்தாலும் அதிலிருந்து துர்நாற்றம் வர தொடங்குகிறது.
அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருந்து சில பொருட்களை வைத்தே, பிரிட்ஜில் இருந்து துர்நாற்றத்தை நீக்கலாம். இதன் மூலம் ஃப்ரிட்ஜ் எளிதில் சுத்தமாகும் மற்றும் துர்நாற்றம் நீங்கும். சரி வாங்க, இப்போது பிரிட்ஜை சுத்தம் செய்வதற்கான அற்புதமான குறிப்புகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலுமிச்சை : ஃப்ரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து எலுமிச்சை இரண்டாக வெட்டி, அதை அந்த தண்ணீரில் போட்டு பிறகு, அந்த பாத்திரத்தை பிரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா: பிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து, அதை கொண்டு ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யவும். இது ஃப்ரிட்ஜில் துர்நாற்றத்தை எளிதில் நீக்கிவிடும்.
காபி கொட்டை : காபி கொட்டையின் உதவியுடன் பிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்கலாம். இதற்கு காபி கொட்டைகளை ஃப்ரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து, காலையில் ஃப்ரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்காது.
இதையும் படிங்க: இந்த பழங்களை தப்பி தவறி கூட பிரிட்ஜில் வைக்காதீங்க...ஏன் தெரியுமா?
உப்பு: ஃப்ரிட்ஜின் துர்நாற்றத்தை நீக்க உப்பு போட்டு சுத்தம் செய்யலாம். இதற்கு வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை சுத்தம் செய்தால் ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் எளிதில் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: ஃப்ரீசரில் ஐஸ் கட்டுவது ஏன்? அதை எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ் இதோ!
ஆரஞ்சு தோல் : ஆரஞ்சு தோல்களின் உதவியுடன் நீங்கள் பிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்கலாம். இதற்கு ஆரஞ்சு பழத்தை தோலை குளிர்சாதனை பெட்டியில் வைத்தாலோ போதும். துர்நாற்றம் தானாகவே மறைந்து விடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D