கழுத்தில் Perfume யூஸ் பண்ணா கழுத்து கருப்பா மாறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Effects Of Perfume On Skin : பெரும்பாலானோர் வாசனை திரவியத்தை முதலில் கழுத்தில் தான் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானதே.
தற்போது அனைவரும் வாசனை திரவியம் பயன்படுத்தாமல், வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் அடிக்கும் வெயிலால் உடலில் இருந்து வரும் வியர்வை நாற்றத்தைப் போக்கவும், புத்துணர்ச்சியாக இருக்கவும் அவ்வப்போது வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். ஆனால், பெரும்பாலானோர் வாசனை திரவியத்தை முதலில் கழுத்தில் தான் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானதே.
வாசனை திரவியத்தை இப்படி கழுத்தில் அடிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். இல்லையெனில், உங்களது கழுத்து கருமையாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. ஆம் இப்படி கழுத்தில் வாசனை திரவியத்தை அடிக்கும் போது உங்கள் கழுத்தில் நிறத்தை கருமையாக அது மாற்றும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள தொடர்ந்து கீழே படியுங்கள்.
இதையும் படிங்க: பெர்ஃப்யூமின் முழு பயன்பாடும் கிடைக்க இதைச் செய்தால் போதும்..!!
நிபுணர்கள் சொல்வது என்ன?:
வாசனை திரவங்களில் சில கலவைகள் சேர்க்கப்படுகின்றன எனவே அவற்றை கழுத்தில் அடித்து நாம் வெளியே செல்லும்போது அந்த கலவையானது சூரிய ஒளி உடன் வினைபுரிந்து, தோலில் கருமையை நிறத்தை உண்டாக்கும். அது மட்டும் இன்றி தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது தவிர, செயற்கை வாசனை போன்ற வாசனை திரவியங்களில் இருக்கும் சில கூறுகள், ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உணர்திறன் செய்கிறது இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடிப்புகள், சிவத்தல், அரிப்பு, ஒவ்வாமல் தோளில் வீக்கம் பிரச்சனைகளும் ஏற்படலாம் மற்றும் அதிகரிக்கலாம்.
ஆல்கஹால் மற்றும் செயற்கை வாசனை திரவங்களில் உள்ள சில பொருட்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியான எரிச்சல் அல்லது வீக்கம் மெலனோசைட்டுகளை அதிக மெலமின் உற்பத்தி செய்ய தூண்டுகிறது. இதன் விளைவாக கழுத்து பகுதியுல் கருமையாக புள்ளிகள் ஏற்படும்.
இதையும் படிங்க: இந்த நாட்டில் செம்மறி ஆடுகள் மீது 'Axe Body Spray' தெளிக்கிறாங்க.. காரணம் தெரிஞ்ச ஷாக் ஆவிங்க!!
வாசனை திரவியம் பயன்படுத்த சரியான வழி :
நீங்கள் வாசனை திரவியம் பயன்படுத்த விரும்பினால் உங்கள் சருமத்திற்கு பதிலாக ஆடைகளில் பயன்படுத்துங்கள். இது தவிர, நீங்கள் எந்த வாசனை திரவியத்தை பயன்படுத்தினாலும் அதற்கு முன் பேட்ஜ் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுபோல, நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தால் உங்கள் தோலில் எரியும் அல்லது அரிப்பு உணர்வு ஏற்படால், உடனே அவற்றை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D