Asianet News TamilAsianet News Tamil

பெர்ஃப்யூமின் முழு பயன்பாடும் கிடைக்க இதைச் செய்தால் போதும்..!!

வாசனை திரவியங்களைப் பயன்படுத்தும்போது சிலவற்றை கவனத்தில் கொள்வது நல்லது. அதற்கு காரணம், இன்று போலி வாசனை திரவியங்கள் சந்தையில் சகட்டு மேனிக்கு கிடைப்பது தான். ஒரு போலி தயாரிப்பு ஒருபோதும் உண்மையான தயாரிப்பின் தரத்தை கொண்டிருக்காது.
 

how to get all usage of perfume tips
Author
First Published Feb 19, 2023, 5:43 PM IST

போலி வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பல்வேறு வகையில் பட்டியிடலாம். நறுமணத்தை விரைவாக இழப்பது, தோல் எரிச்சல் மற்றும் ஆடைகளில் கறை படிதல் உள்ளிட்டவை அடங்கும். உலகளவில் பிப்ரவரி 15-ம் தேதி பெர்ஃப்யூம் டேவாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்குப் பிறகு வரும் நாள் என்பதால், வாசனை திரவியம் மிகவும் பிரபலமான காதலர் தின பரிசுகளில் ஒன்றாகும். இன்றைய காலத்தில் பல வாசனை திரவியங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 

எனினும் வாசனை திரவியங்கள் மூலம் சில நல்லவையும் நமக்கு நடக்கின்றன. வீட்டு சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களுக்கு, உடல் பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியுண்டு. அதேபோன்ற தாக்கம் வாசனை திரவியங்கள் மூலமாகவும் கிடைக்கின்றது. வாசனை திரவியங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் மற்றும் உங்களுக்கு பிடித்த நினைவுகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. வாசனை திரவியங்கள் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும்.

வாசனை திரவியங்களைப் பயன்படுத்தும்போது சிலவற்றை கவனத்தில்கொள்ள வேண்டும். போலி வாசனை திரவியங்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. ஒரு போலி தயாரிப்பு ஒருபோதும் உண்மையான தயாரிப்பின் தரத்தை கொண்டிருக்காது. போலி வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. 

நல்ல வாசனையைப் பெற, நீங்கள் அதிக வாசனை திரவியங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. அதிகப்படியான பயன்பாடு கடுமையான வாசனையை ஏற்படுத்தும் மற்றும் பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அக்குள், கழுத்தின் பின்புறம் மற்றும் முழங்கால்களில் வாசனை திரவியம் பூச வேண்டும். பயன்பாடு மிதமானதாக இருக்க வேண்டும். குளித்த உடனேயே வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் உடம்பை நன்றாக துடைப்பதன் மூலம் தண்ணீர் அனைத்தும் போய்விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் வாசனை நீண்ட காலம் நீடித்திருக்கும்.

கட்டிப்பிடி வைத்தியத்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

சிலர் உடல் வாசனை திரவியங்களை தங்கள் ஆடைகளில் பயன்படுத்துகிறார்கள். இது வாசனை நீண்ட காலம் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மை அப்படி கிடையாது. உடலின் இயற்கையான எண்ணெய்களுடன் பணிபுரியும் போது, ​​வாசனை திரவியங்கள் அதிக மணம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. வாசனை திரவியத்தை அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் தேய்த்தால், அது வாசனை இழந்துபோகும். 

எப்போது நேரடி சூரிய ஒளி படாத இடங்களில் வாசனை திரவியங்களை தேய்க்க வேண்டும். அப்போது தான் வாசனை திரவியத்தின் பயன்பாடு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த டிப்ஸ் அனைத்து விதமான வாசனை திரவியங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios