Asianet News TamilAsianet News Tamil

கட்டிப்பிடி வைத்தியத்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் துணையை கட்டிப்பிடிக்கலாம். நண்பர்களைச் சந்திக்கும்போது, ​​அவர்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். ஒருநாளில் பலமுறை கட்டிப்பிடிப்பதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
 

There is also a day to hug if you hug the profit is huge
Author
First Published Feb 11, 2023, 11:15 AM IST

காதலர் வாரத்தின் 6வது நாளான பிப்ரவரி 12-ம் தேதி கட்டிப்பிடி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தம்பதிகள், வாழ்க்கைத் துணைவர்கள் மட்டுமல்லாது நண்பர்களுக்கு கூட ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறலாம். ஒருவரை ஆறத்தழுவி அன்பை பரிமாறுவதன் மூலம் பல நன்மைகள் உள்ளன. நம்மில் பலரும் யாரையாவது ஆறுதல்படுத்தும்போதோ அல்லது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும்போதோ கட்டிப்பிடிப்போம். நாம் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது நம் உடலில் பல ஹார்மோன்கள் வெளியாகும். இது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. காதலர் வாரத்தில் இந்த கட்டிப்பிடி நாள் கொண்டாடப்படுவது காதலர்களுக்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் நம் அன்புக்குரியவர்களை கட்டிப்பிடித்தால், நம் அன்புக்குரியவர்கள் மீது நம் அன்பும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கும்.

பிறரை எவ்வளவு முறை கட்டிப்பிடிக்கலாம்?

நம் மனதுக்கு பிடித்தவரை அல்லது நமது அன்பிற்குரியவர்களை ஒரேயொரு முறை கட்டிப்பிடிப்பதால் எந்த பலனும் ஏற்பட்டுவிடாது. மன அழுத்தத்தைக் குறைக்கவும், தொடர்பை மேம்படுத்தவும், அன்பை அதிகரிக்கவும் விரும்பினால் குறைந்தது ஒருநாளைக்கு 4 முறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும். அதிகபட்ச பலனைப் பெற நீங்கள் 8 முதல் 12 முறை கட்டிப்பிடிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. உங்களுக்கு உடலும் மனமும் ஆரோக்கியம் பெற விரும்பினால், உங்களுக்கு விருப்பமானவரை அல்லது அன்பிற்குரியவர்களை பலமுறை கட்டிப்பிடிக்க வேண்டும்.

மன அழுத்தம் குறைகிறது

உங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது காதலர் அல்லது நண்பர் உள்ளிட்டோர் மோசமான சூழ்நிலையை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுங்கள். இதன்மூலம் மன அழுத்தம் குறையும். ஒருவரைத் தொடுவது அல்லது கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். கட்டிப்பிடிக்கும்போது மூளையின் சில பகுதிகள் நேர்மறையாக செயல்பட ஆரம்பிக்கின்றன. இதனால் சஞ்சலத்தில் இருப்பவரின் மனம் ஆறுதல் பெறுகிறது.

நோய் வராமல் தடுக்கிறது

மன அழுத்தப் பிரச்னைகள், மனித ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். மன அழுத்தம் குறைந்தால், மனிதனுக்கு உடல்நலம் மேம்படுகிறது. நாற்பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய  ஆய்வின்படி, கட்டிப்பிடிப்பது நோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது உறுதிசெய்யபட்டுள்ளது. குறைந்தது ஒருவரை ஒருநாளில் 20 நிமிடம் வரை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தம் அழுத்தம் பிரச்னை இருந்தால், அது குறைந்துவிடும் மற்றும் இருதயத் துடிப்பும் மெதுவாக இருக்கும்.

உடலுறவு முடிந்தவுடன் பெண்கள் செய்யவேண்டிய 5 செயல்கள்..!!

மகிழ்ச்சி பெருகும்

ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதால் பயம் நீங்கும் என்கின்றனர் நிபுணர்கள். பதட்டத்தை குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. கரடியை கட்டிப்பிடித்தால் கூட பயம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்குமாம். அருகில் அமர்ந்து, தொடுவது அல்லது கட்டிப்பிடிப்பது போன்ற செயல்கள் ஆக்ஸிடாக்ஸின் ரசாயன அளவை அதிகரிக்கிறது. இதுவொரு அரவணைப்பு ஹார்மோனாகும் மற்றும் இது பாதிக்கப்பட்ட நபருக்கு மகிழ்ச்சியை தருகிறது.

உடல் வேதனை இருக்காது

உடல் முழுவதும் வலியை ஏற்படுத்தும் ஃபைப்ரோமியால்ஜியா நோய்க்கு 6 சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டிப்பிடிப்பது உட்பட, ஒருவரையொருவர் தழுவிக் கொள்வது வலியை ஓரளவு குறைக்கும் என நம்பப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios