டீயில் ஏலக்காய் சேர்க்கும் பழக்கம் இருக்கா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி விடமாட்டீங்க..!
Cardamom Tea Health Benefits : டீ-யில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஏலக்காய் என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் ஆகும். இதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி3, வைட்டமின் சி, ஜிங்க், கால்சியம், பொட்டாசியம் போன்ற எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பலர் டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதை விரும்புவார்கள். ஆனால், அப்படி குடிப்பது உடலுக்கு ரொம்பவே நல்லது தெரியுமா? இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஏலக்காய் சமையலில் சேர்ப்பதற்கு இதுதாங்க காரணம்..! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
டீ-யில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
டீயில் ஏலக்காய் போட்டு தொடர்ந்து குடித்து வந்தால் அமிலத்தன்மை நீங்கும், அஜீரணத் தடுக்கப்படும், வாயு, வீக்கப் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும். மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே, உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் டீயில் ஏலக்காய் போட்டு தொடர்ந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.
அதுமட்டுமின்றி, இந்த டீ இதய ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். எனவே நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து ஏலக்காய் டீ குடிப்பது ரொம்பவே நல்லது.
இதையும் படிங்க: Cardamom Benefits: ஏலக்காய்; அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் அருமருந்து நரம்பு பிரச்சினை எட்டிக்கூட பார்க்காது!
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஏலக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது ரொம்பவே நல்லது. மேலும் இந்த டீ வயிற்றில் கொழுப்பு சேருவதை தடுக்கவும் உதவுகிறது. ஏனெனில், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்தால் அது வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கிறது மற்றும் இதய பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்யும். எனவே, ஏலக்காய் டீயை தவறாமல் குடித்து வந்தால் இந்த கெட்ட கொழுப்பை சுலபமாக அகற்றி விடலாம். முக்கியமாக, ஏலக்காய் டீ மன அழுத்தத்தை குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D