Viral Video: கத்தியை சாணை பிடிக்கும் ராமாயணக் குரங்கு! ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வைரல் வீடியோ!

குரங்கு ஒன்று கத்தியை கல்லில் உரசி உரசி தீட்டும் காட்சியை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

IPS officer Rupin Sharma shares video of monkey sharpening a knife

அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் அசாதாரண வீடியோக்கள் அனைவரையும் கவர்கின்றன. அந்த வகையில் ஒரு குரங்கு வீடியோ இப்போது இணையத்தைக் கலக்கிக்கொண்டு இருக்கிறது. பொதுவாகவே குரங்குகளின் அசைவுகள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். சில நேரங்களில் ஆச்சரியமாகவும் இருக்கும்.

குறும்பாக ஏதாவது செய்பவர்களை ‘குரங்குச் சேட்டை’ செய்வதாகச் சொல்வோம். அப்படி சேட்டைகளுக்குப் பேர்போன குரங்கு ஒன்று கத்தியை சாணை பிடித்தது தன்னுடைய திறமையைக் காட்டி இருக்கிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை இதுவரை 8 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

Summer 2023: ஏசி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மனசுல வெச்சுக்கோங்க!

குரங்கு ஒன்று கத்தியை எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக கல்லில் தேய்த்துத் தேய்த்து கூர்மைப்படுத்தும் காட்சியை இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் என்ன என்று ரூபின் சர்மா தனது பதிவில் குறிப்பிடவில்லை.

அந்தக் குரங்கு மனிதர்கள் செய்ததைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு அதே போல செய்ய முயல்கிறாதா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ பற்றி கூறியுள்ள ரூபின் சர்மா, ராமாயணத்தைத் தொடர்புபடுத்து ஒரு வேடிக்கையான கருத்தைக் கூறியுள்ளார்.

இது ராமாயணத்தில் ராமர் ராவணனை அழிக்கச்  சென்றபோது, அவருடன் வானர சேனையில் இடம்பெற்ற குரங்கு போலத் தோன்றுகிறது என்று ரூபின் சர்மா நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போலவே இந்த வீடியோவை ரசித்துப் பார்த்தவர்கள் பலர் தங்கள் மனதில் பட்டதை பதிவிட்டு வருகிறார்கள்.

ஆபாச வீடியோ பார்ப்பதைத் தடுத்த மனைவியை தீவைத்துக் கொன்ற இளைஞர்

அவர்களில் ஒருவர், “நல்ல பயிற்சி பெற்ற குரங்காக இருக்கிறது. வேலையில் சேர்த்துக்கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த வீடியோவை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கின்றனர். பலர் ஸ்மைலி மூலம் தங்கள் சிரிப்பைக் காட்டிக்கொள்கின்றனர்.

ஆனால், வேறு சிலர் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். “இந்தக் காலத்தில் குரங்குகள்கூட பாதுகாப்பானவையாக இல்லை” என்று ஒரு நெட்டிசன் கவலையுடன் சொல்கிறார். குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்த கதை என்று சொல்வார்களே. இந்த வீடியோவைப் பார்க்கும்போது அந்தப் பழமொழியையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது இல்லையா?

இந்த சாமர்த்தியமான குரங்கைப் பார்த்தவுடன் உங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது? அதை நீங்ஙளும் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Gurugram: கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios